பகைஞனுடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளல் POSSESSING THE ENEMY'S GATES பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில் இந்தியானா, அமெரிக்கா 59-11-08 1. இப்போது நாம் பிணியாளிகளுக்காக ஜெபிக்கவும், வார்த்தையைக் கொண்டு வரவும் நம்முடைய ஆராதனையை ஆரம்பிகிறோம். இன்று காலை நான் பேச ஒரு சிறு வேத வாக்கியத்தை, வேதாகமத்திலிருந்து இரண்டு இடங்களைத் தெரிந்துக் கொண்டுள்ளேன். ஆனால் பேசுவதற்கு முன் ஜெபத்துக்காக சற்று நேரம் தலை வணங்குவோமாக. 2. மிக்க கிருபையுள்ள தேவனே, தகுதியற்ற பிள்ளைகளாகிய நாங்கள் இன்று காலையிலே உம்முடைய கிருபையின் சிம்மாசனத்தைத் தாழ்மையுடன் அணுகுகின்றோம். ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் எங்களுடன் இருக்கும் நமது நித்திய பிரசன்னத்தினால் அளித்த மாசற்ற விசுவாசத்துடன் வந்து, அவர் நாமத்தினாலே எதையாகிலும் கேட்டால், எங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைத்த வாக்குத்தத்தத்தின் மூலம் வருகின்றோம். ஆகவே நாங்கள் பின் நோக்கி எங்கள் தகுதியைக் காண்பதில்லை. ஏனெனில் எங்களுக்குத் தகுதி எதுவுமில்லை. நாங்களோ பின் நோக்கி, தேவனுடைய குமாரனால் எங்களுக்குக் கிருபையின் மூலம் இலவசமாய் அளிக்கப்பட்ட கல்வாரியின் தகுதியையே காண்கிறோம். தகுதியற்றவர்களாகிய நாங்கள் அவர் கல்வாரியண்டை தமது கிருபையால் எங்களைத் தேவனுக்குச் சமீபமாய் எவ்வண்ணம் கொண்டு வந்து சொந்தக்காரராக்கினார் என்பதை உணரும் போது, எங்களுடைய தொண்டைகளை அடைக்கும் கண்ணீரை விலக்க சக்தியற்று போகிறோம். இப்போது நாங்கள் அவருக்குக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். 3. கர்த்தாவே, இன்று காலையிலே நாங்கள் இந்த சிறு கூரையின் கீழ் எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, திவ்விய பணிவுடன் ஆராதனை செய்ய வருகின்றோம். ஆயிரமாண்டுகளாக எதிர்பார்த்து வந்த அந்த உன்னத சம்பவத்துக்காக, தினமும் எங்களுடைய இருதயத்தை ஆயத்தம் செய்யத்தக்கதாக நீர் எங்களுடன் இருப்பீர் என்றும், உம்முடைய வருகை சமீபமாயிருக்கிறதென்ற ஆத்மீக அறிவை எங்களுக்குத் தருவீர் என்றும் நம்புகின்றோம். உண்மையில் எல்லா இயற்கையும் மீட்புக்காகப் புலம்பித் தவிக்கிறது. கர்த்தாவே, எங்களுக்குள் இருக்கும் எங்கள் ஆவிகள் எங்களில் தொடர்ந்து, "நாங்கள் பிணியாளிகள், அந்நியர்கள், இது எங்களுடைய வீடு அல்ல. ஆனால் நாங்களோ தேவன் கட்டின நகரத்தைத் தேடுகின்றோம்'' என்று அறிக்கையிடுகின்றன. அத்தகைய மகத்தான நேரம் வருவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். 4. கர்த்தாவே, நாங்கள் இங்கே கூடும் போது இந்தக் கூட்டங்களிலே துன்பத்தினாலும் பிணியினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் உம் பிள்ளைகளுக்காக கவனமாய் ஜெபிப்போம்.. எல்லா நோய்களையும் ஜனங்களிலுள்ள வியாதிகளையும் குணமாக்க இன்று நீர் வந்து, எங்களை ஒரு தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டுகின்றோம். நேற்று மாலை வேளையில் நீர் என்னை சந்தித்த போது நீர் திரும்ப திரும்ப நிரூபித்ததைக் குறித்து நான் சற்று முன்பு பேசிக்கொண்டிருந்தேனே, அந்த வாக்குத்தத்தத்தை, கர்த்தாவே, நினைவு கூறும் காலம் மிகவும் அருகாமையிலிருப்பதை நாங்கள் உணருகின்றோம். இந்த ஊழியத்தை, கர்த்தாவே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு மிக்க கிருபையுள்ளதாக மாற்றியருளக் கூடும். ஆண்டவரே, அது இன்றைய நாளாக இருக்கட்டும். 5. இப்போதும், பிதாவாகிய தேவனே, நாங்கள் இங்குள்ளவர்களுக்கு மாத்திரம் ஜெபிக்காதபடி, உலகம் பூராவும் பரம்பியுள்ளவர்களின் சரீரப்பிரகாரமான ஆத்மீகப் பிரகாரமான தேவைகளுக்காக ஜெபிப்போம். ஓ, கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின் விருப்பத்தைத் தந்தருளும். ஏனெனில் இந்நாட்களில் உம்முடைய பிள்ளைகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பகைஞனுடைய நெருக்கம் மிக பலமாயிருக்கிறது. ஆனால் நீர் அவனைக் காட்டிலும் வல்லமையானவர். ஏனென்றால், "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே நாங்கள் ஜெயங்கொள்கிறோம். எழுதப்பட்டிருக்கும் உம்முடைய வார்த்தையினாலே எங்களுடன் பேசும். இன்று காலை நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் போது, "வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கங்காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா-?" என்று எம்மாவூருக்குச் சென்றவர்கள் கூறினதைப் போலவே நாங்களும் கூறச் செய்தருளும். வாக்குத்தத்தம் அருளின இயேசுவின் நாமத்திலே நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம். ஆமென். 6. இப்போது நான் ஆதியாகமம் புத்தகத்திலிருந்து இரண்டு இடங்களை வாசிப்பேன். அவைகளிலொன்று 24-ம் அதிகாரம் 56-ம் வசனம் தொடங்கி:--- "அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப் பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, ரெபெக்காளை வாழ்த்தி : எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.'' ஆதி 24: 56-60 7. அடுத்தது ஆதியாகமம் 22:15 தொடங்கி நாம் வாசிப்போம். "கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்த காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்றார்." ஆதி. 22: 15 - 18 8. வாசிக்கப்பட்ட இந்த வார்த்தையுடன் கர்த்தர் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இன்று காலை, இதை ஒரு பாடம் என்று அழைப்போமானால், நான் பேச எடுத்துக்கொள்ளும் பொருள் : முதலாவது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வாசல்களுக்கு முன் சோதித்தல், பிரசங்கத் தலைப்பு; பகைஞனுடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளல். 9. தேவன், அந்த வம்சத் தலைவனைச் சோதித்தார். ஏனென்றால் அவனுக்கு அவர் ஒரு வாக்குத்தத்தம் அளித்திருந்தார். தேவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணும் போது அவர் வாக்களித்ததை நிறைவேற்றுமுன், அல்லது அவர் உரைத்ததை நிறைவேற்றுமுன், அந்த மனிதன் அந்த வாக்குத்தத்தத்துக்கு தகுதியாயிருக்கிறானா என்பதைக் குறித்து உறுதிகொள்ள விரும்புகிறார். ஆபிரகாமுக்கு, அவனுடைய சந்ததியின் மூலமாக உலகம் முழுவதும் ஆசீர்வதிக்கப்படும் என்றும், அவன் ஒரு குமாரனைப் பெறுவான் என்றும், அவனுடைய சந்ததியிலிருந்து தோன்றும் அந்தக் குமாரன் முழு உலகத்தையும் ஆசீர்வதிப்பார் என்றும் வாக்களிக்கப்பட்டது. அந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்ட போது ஆபிரகாம் 75-வயதுள்ளவனாயிருந்தான். அவனுடைய மனைவி சாராள் 65- வயதுள்ளவளாயிருந்தாள். ஆனால் ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையைக் குறித்து சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தினான் என்று நமக்கு வேதாகமம் கூறுகின்றது. தேவன் அவனை அடிக்கடி சோதித்தார். ஆனால் அவன், ஆசீர்வாதத்தைப் பெறும் முன்பு கடைசி சோதனைக்கு வரவேண்டியதாயிருந்தது. 10. அவ்விதமாகவே ஆபிரகாமின் சந்ததியார் அனைவரும் சோதிக்கப் படுகின்றனர். தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்று முன்னர் அவ்வித கடைசி சோதனையை நமக்கும் கொடுக்கிறார். கூடுமானால் இங்கே நான் ஒரு சொந்தக் காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் அதை நிறுத்தி வைப்பேன். அந்த கடைசி சோதனை வரும் போது நீங்கள் எப்படி நிற்பீர்கள் என்பதைக் காண அப்படிச் செய்கிறேன். தேவன் ஆபிரகாமுக்கு இந்த பரீட்சையைக் கொடுக்கும் போது, அவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே இருப்பதை அவர் கண்டார். இன்று காலையிலே அவருடைய சுகப்படுத்தும் வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்ளும் நாம், வைத்தியர் எதைக் கூறினாலும் சுகப்படுதலை ஏற்றுக்கொள்ளும் போது, இம்மாதிரியே, சத்தியத்தில் நிலைத்திருப்போமானால் நமக்கு அது எத்தகைய ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். 11. அவன் தனது ஒரே பேறான குமாரானையும் கொடுக்க மறுக்காமல் கத்தியை ஈசாக்கின் மார்பினுள் புகுத்தி தன்னுடைய அனுபவச் சாட்சியையும் முறியடிக்க இருந்த போது... அவன் அறிமுகப்பட்ட இடத்திலெல்லாம், தான் வாக்குத் தத்தத்தினால் குமாரனைப் பெற்றெடுத்ததாக சாட்சி கொடுத்து வந்தான். அந்தக் குமாரனைப் பெற்றெடுத்தபோது, அவன் ஓடி அவனுடைய சாட்சி நிறைவேற இருந்த ஒரே நம்பிக்கையையும் நிர்மூலமாக்க அவன் அழைக்கப்பட்டான். அவன் விசுவாசத்தில் உண்மையாயிருந்ததை தேவன் கண்ட போது, தேவன் பரலோகத்திலிருந்து "உன்னை ஆசீர்வதித்துப் பெருகப் பண்ணுவேன். உன் சந்ததியார் தங்கள் பகைஞரின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று நான் என் பேரில் ஆணையிட்டேன்'' என்றார். என்னே ஒரு வாக்குத்தத்தம் -! 12. பிரபலமான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட குமாரனுக்குத் தாயாராக இருக்க வேண்டிய ரெபெக்காள், அவள் ஒரு போதும் காணாத ஒரு அந்நியனைக்குறித்த இறுதி பரிட்சைக்கு அழைக்கப்பட்ட போது, அவள் பரிசுத்த ஆவியின் கிரியைகளை மாத்திரமே கண்டாள். அவள் ஒரு போதும் காணாத ஒருவனுக்கு மனைவியாக அந்த அந்நியனுடன் அனுப்பலாமா வேண்டாமா என்று அவள் பெற்றோர் முடிவு செய்யுமுன்பே, அவள் இறுதி பரீட்சைக்குக் கொண்டு வரப்பட்டாள். பெண்ணை அழைத்து, அவள் என்ன சொல்கிறாள் என கேட்போம். அவள் போவாளா-? இல்லையா-? ஆம் என்கிறாளா-? இல்லை என்கிறாளா-? என்பதை அவள் வாயினாலேயே கேட்போம்'. 13. அவ்விதமாகவே தேவனுடைய எல்லா சந்ததிக்கும் பரீட்சை அளிக்கப்படுகிறது. அது உன் வாயிலிருந்தே வரவேண்டும். நீ என்ன சொல்கிறாய் என்பதை தேவன் கேட்க விரும்புகின்றார். 14. அவள் சோதிக்கப்பட்ட போது அவள் ஒரு நிமிடம் கூட தயங்கவில்லை. அவள், "நான் போகிறேன் " என்றாள். அது எனக்கு மிகவும் பிரியம். "நான் சிந்தித்துப் பார்க்கட்டும். நான் அதை ஆராய்ந்து பார்க்கட்டும்'' என்று அவள் கூறவில்லை . அவள் முழுவதுமாக சம்மதித்தாள்-! அத்தகைய ஜனங்களையே தேவன் உபயோகிப்பார். தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்வார் என்று நீங்கள் முழுவதுமாக நம்பினால், அவர் உங்களை உபயோகிப்பார். அவள், "போகிறேன்'' என்றாள். 15. அவனுடைய ஜனங்கள் ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டு - அதை ஒருக்கால் அவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம். அவர்களோ அவர்களுடைய சகோதரி, அவர்களுடைய மகள். இந்த அழகான யூதப் பெண்ணை ஒட்டகத்தின் மேல் உட்கார வைத்து அந்நிய நாட்டுக்கு அந்நியரின் மத்தியில் அனுப்பும் போது, அவர்கள் தங்கள் கைகளை அவள் மேல் வைத்து தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். அவர்கள் மேல் ஏதோ ஒன்று (பரிசுத்த ஆவி) இருந்தது. அவர்கள், "நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். 16. இன்று அந்த ஜாதி, தேவனுடைய ஜனம், கடல் மேல் பயணப்பட்டு உலகம் எல்லாம் சென்று பாடுபடுகிறார்கள். உயிர்த்தெழுதலிலே அவர்கள் பரலோகத்தின் நட்சத்திரங்களாய் வானத்தில் காட்சியளிப்பார்கள். அவர்கள் கடற்கரை மணலைப் போல பெருகியிருப்பார்கள். அவர்கள் கோடிக்கணக்கானவர்களாய் இருப்பார்கள். 17. "உன் சந்ததியார் தங்கள் பகைஞரின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.'' இது தேவன் ஆபிரகாமின் சந்ததிக்கு ஆணையிட்ட வாக்குத் தத்தம். தாய் குமாரனின் பாகமாயிருப்பதனால், ஜனங்கள் மூலமாய் கிரியை செய்த பரிசுத்த ஆவியானவர் "உன் சந்ததி தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளட்டும்'' என்றார், அவர்கள் சத்துருக்களின் வாசலைச் சுதந்தரிப்பார்கள் என்று தேவன் ஆணையிட்டிருப்பதனால், அது ஜீவனுள்ள தேவனுடைய சபையை எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வருகின்றது-? 18. நாம் ஆபிரகாமின் சந்ததியார், நாம் கிறிஸ்துவில் இருப்பதனால் நாம் ஆபிரகாமின் சந்ததியாராகி தேவன் ஆணையிட்ட அதே வாக்குத்தத்ததுக்கு நாம் அவனுடன் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம். நாம் ஆபிரகாமின் சந்ததியார், அவனுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குத்தத்தத்துக்கும் நாம் பங்காளிகளாய் இருக்கிறோம். ஆனால் பரிட்சை நமக்கு வரும் போது நாம் விழுந்து போகிறோம். ஆனால் ஆபிரகாமின் உண்மையான சந்ததி விழுந்து போகும் என்று நான் நம்புவதில்லை. அவர்கள் ஆபிரகாமைப் போன்று தீரமாய், உண்மையாய் நிற்பார்கள். 19. தேவன் நிறைவேற்றாத எந்த ஒரு காரியத்தை கூறுவதோ அல்லது வாக்குத் தத்தம் செய்வதோ கிடையாது. அவர் தேவனானால், அதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். அநேக ஆண்டுகளுக்கு பின்பு, அதே ஜனம், வாக்குத்தத்தத்தின் ஜனம், ஆபிரகாமின் சந்ததி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குப் பிரயாணப் பட்டுப் போகும் போது, ஒரு வாசல் அவர்களுக்கெதிராக நின்றது. அந்த வாசல் அவர்களுடைய சகோதரரான மோவாபியரே. "நீங்கள் எங்களுடைய தேசத்தில் நுழைந்து போகக் கூடாது. நீங்கள் எங்கள் தேசத்தில் எப்படி நுழைந்து போகிறீர்கள் என்று பார்க்கலாம்'' என்றனர். 20. அவர்கள் "எங்கள் மாடுகள் உங்களுடைய புல்லை மேய்ந்தால், அவைகள் உங்களுடைய தண்ணீரைக் குடித்தால், நாங்கள் அதற்கு பணம் செலுத்தி விடுகிறோம்'' என்றார்கள். ஆனால் அவர்களோ "நீங்கள் இந்த தேசத்தைக் கடந்து செல்லக் கூடாது” என்றார்கள். 21. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம் அங்கு நிறைவேறினது. அவர்கள் சென்று தீர்க்கதரிசியாகிய பிலேயாமை இஸ்ரவேலை சபிக்கும்படி அழைத்து வந்தார்கள். அவன் இவ்வாறு கூறினான். ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியின் மோசமான பாகத்தை அவர்கள் அவனுக்கு காண்பிக்க முயன்றனர். ஆனால் தேவன் அவர்களின் மேலான பாகத்தைக் காண்பித்தார். அவர், "இஸ்ரவேலை சபிக்கிறவன் சபிக்கப்பட்டவனாயும், அவனை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப் பட்டவனாயும் இருப்பான்'' என்றார். தடைகள் கீழே விழுந்தன. இஸ்ரவேலர் சமவெளியைக் கடந்து சென்றார்கள். அவன், பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான் என்று தேவன் வாக்களித்தார். 22. அனேக ஆண்டுகளுக்குப் பின்பு, தானியேல் என்ற பெயர் கொண்ட ஒருவன் தோன்றினான். அவனும் அந்த ராஜரீக வம்சத்தில், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வம்சத்தில் தோன்றினவன். ஏனெனில் அவன் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தான். உலகத் தோற்றத்துக்கு முன்பே தேவன் அவனைத் தம்முடைய தீர்க்கதரிசியாக தெரிந்தெடுத்திருந்தார். அவன் தைரியமுள்ளவனாயும், உண்மையுள்ளவனாயும் வாழ்ந்து வந்தான். அந்நிய தேசத்திலும் கூட "நான் அவர்களுடன் சேர்ந்து என் உடலைத் தீட்டுப்படுத்த மாட்டேன்'' என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்தான். அது தான் ஆபிரகாமின் உண்மையான வித்து. வித்தியாசப்பட்ட தேசத்திலே வித்தியாசமான ஜனங்களின் மத்தியில் அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அவன் "நான் அவர்களுடன் என்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளமாட்டேன், நான் உண்மையாயிருப்பேன்'' என்று தீரமாக அவன் செய்த வாக்குத்தத்தத்தில் நிலை நின்றான். 23. அவனுடைய பிதாவாகிய ஆபிரகாமை சோதித்ததைப் போல் தேவன் அவனையும் சோதித்தார். அந்த தேசத்தின் ராஜா, "எங்களில் ஒருவனைப் போன்று நாங்கள் வணங்கும் முறையில் நீயும் வணங்க வேண்டும். இல்லையேல், நான் உன்னை பசியுள்ள சிங்கங்கள் நிறைந்த கெபியில் போட்டு விடுவேன்'' என்றான். 24. தானியேலோ தன் பிதாவாகிய ஆபிரகாமைப் போலவே, "நீ என்னை சிங்கங்களின் கெபியிலே போட்டாலும் நான் உன்னுடைய விக்கிரகங்களில் யாதொன்றையும் வணங்கமாட்டேன். நான் உன்னுடைய சடங்காச்சாரம் கொண்ட மதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் யேகோவாவுக்கு மாத்திரமே உண்மையாய் இருப்பேன்” என்று பதிலுரைத்தான். 25. பின்னர் வெளிப்படையான சவால் (showdown) நிகழ்ந்தது. அரசன் தன் வாக்கை மீறவில்லை . அவன் அந்தத் தீர்க்கதரிசியைப் பிடித்து சிங்கங்களின் கெபியிலே போடுவித்தான். தானியேலின் பகைஞராகிய அந்த சிங்கங்கள் அந்தத் தீர்க்கத்தரிசியைக் கண்டு அவனை நோக்கி பாய்ந்து வந்தன. அச்சமயம் தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். அவன் தன் பகைஞருடைய வாசலைச் சுதந்தரித்துக் கொண்டான். தேவன் ஒரு தேவதூதனை சிங்கங்களின் முன் நிறுத்தி வாசலைப் பிடித்துக் கொண்டார். "அவன் தன் பகைஞரின் வாசலைச் சுதந்தரித்துக்கொள்வான்'' என்ற வாக்கை அவர் எப்பொழுதும் காத்துக் கொள்வார். தேவன் அவ்விதம் கூறியுள்ளார். 26. விசுவாசத்தில் உண்மையாயிருப்போமென்று வாக்களித்த மேலும் மூவர் உண்டு. அவர்கள் உண்மையாக ஆபிரகாமின் சந்ததியாயிருந்தார்கள். அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள். அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். "தம்புரு வாசித்து எக்காளம் ஊதப்படும் போது, நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்திலிருந்து விலகி எங்கள் மதத்துக்குத் தலைவணங்கவில்லை-யானால்... நீங்கள் பைத்தியக்காரர். உங்களுடைய மதம் மற்ற மதங்களைக் காட்டிலும் மேலானதல்ல" என்றார்கள் அவர்கள். இப்படிச் சொல்லப்படுவதை நாம் எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறோமல்லவா-? ஆனால் இயேசு கிறிஸ்துவின் மதம் வித்தியாசமானது. அவருடைய உயிர்தெழுதலின் வல்லமை வித்தியாச-மானது. நாம் ஒரு வித்தியாசமான ஜனங்கள், விசேஷித்த ஜனங்கள், ராஜரீகமான ஆசாரியக்கூட்டம். அந்த வித்தியாசத்தைத் தேவனே உண்டாக்குகிறவராய் இருக்கிறார். 27. ஆனால் அவர்களோ, "நீங்கள் எங்களுடன் ஒன்றாக வேண்டும்'' என்ற போது, அவர்களுடன் இணைந்திருந்தால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு நலமாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அந்நிய ஜனங்களுடன் ஒன்றுபட மாட்டார்கள். அப்போது அவர்கள், "நீங்கள் வணங்கவில்லையானால், எரிகிற அக்கினி சூளைக்கு ஒரு கதவுண்டு. அதைத் திறந்து அதனுள் உங்களைத் தூக்கி எறிவோம். அப்பொழுது நீங்கள், எங்களுடன் ஒன்றுபட்டிருந்தால் நலமாயிருக்குமே என்று நினைப்பீர்கள்'' என்றார்கள். 28. அவர்கள் தாங்கள் சொன்ன வாக்கின்படி அவர்களை எரிகிற அக்கினி சூளைக்கு நடத்திச் சென்று கதவைத்திறந்து அவர்களை அதனுள் போட்ட போது, அவர்களைப் பட்சிக்கவிருந்த பகைஞனின் வாசலை அவர்கள் சுதந்தரித்துக் கொண்டார்கள். தேவன் தமது குமாரனை அக்கினி ஜூவாலையினுள் அனுப்பி ஜூவாலையைக் குளிரவைத்து, அங்கே அவர்களுடன் பேச வைத்தார்-! தேவனுடைய வாக்குத்தத்தம் அங்கு உண்மையாக ஆனது. அவர்கள் பகைஞனின் வாசலைச் சுதந்தரித்துக் கொண்டார்கள். முதலாவது சோதிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்தார்கள். "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக்கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். என்னில் விசுவாசிக்கும் இந்தச் சிறியருக்கு இடறல் உண்டாக்காதே-! என்னில் விசுவாசமாயிருப்பவர்களின் மூலம் இந்த அடையாளங்கள் நடக்கும்'' என்று வாக்களித்தவர் இயேசு அல்லவா-? 29. அவர் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கினார். விசுவாசிப்பவர்களுக்கும் விசுவாசிக்காதவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அவர் காட்டினார். எப்போதும் ஜனங்களில் மூன்று சாரார் உள்ளனர்; அவிசுவாசிகள், விசுவாசிகளாய் நடிப்பவர்கள், விசுவாசிகள். விசுவாசிகள் யார் என்பதை நிரூபிக்க தேவனிடம் ஒரு வழியுண்டு. தேவன் எதை சத்தியம் என்கிறாரோ, அதன் மேல் விசுவாசியானவன் திடனாய் நிற்கிறான், ஆம். 30. திஸ்பியனாகிய எலியா வெளிப்படையான சவாலில் நின்றபோது, அந்த தேசத்திலே ஜீவனுள்ள தேவனுக்காக அது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறவன் அவன் ஒருவனே என்று அவன் எண்ணியிருந்தான். அந்த அரசன் அவனை நியாயஸ்தலத்திற்குக் கொண்டு வரவிருந்தான். அவர்கள் அவனைத் துன்புறுத்தினர். வர்ணத்தால் அலங்கரித்துக் கொண்ட யேசபேல் என்னும் அரசி அவனைக் கொன்று போடுவதாக பயமுறுத்தினாள். அவன் அந்த சவாலுக்கு வந்த போது, தன் பகைஞனின் வாசலைச் சுதந்தரித்து முழு தேசத்தையும் தேவன் இடத்துக்குத் திருப்பினான். தேவன் தம் வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். 31. ஆபிரகாமின் சந்ததியாகிய ராஜரீக வித்தின் சந்ததியில் தோன்றிய மோசே, இஸ்ரவேல் புத்திரரை மீட்கும்படி எகிப்துக்கு அனுப்பப்பட்ட போது, தேவன் அவனுக்கு அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யவும், பூமியை அடிக்கவும், தவளைகளையும் வண்டுகளையும் தோன்றச் செய்யவும், இருள், கல்மழை, அக்கினி முதலியவற்றை வரச்செய்யவும், வரங்கொடுத்திருந்தார். ஆனாலும் அவன் அவர்களை யேகோவாவின் கரத்தால் வழி நடத்தின்போது, அவனுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கும் இடையே ஒரு வாசலை அவன் சந்தித்தான். அங்கே செங்கடல் அவர்கள் வழியில் ஒரு தடையாய் நின்றது. அவர்கள் பார்வோனின் படையாலும், மலைகளாலும், பாலைவனத்தாலும், செங்கடலாலும் சூழப்பட்டார்கள். ஆனால், மோசேயோ, முன் சென்று பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்து, உலர்ந்த செங்கடலை தூசி படிந்த பாதையைக் கடப்பது போல் கடந்து சென்றான். "நீங்கள் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வீர்கள்.” தேவன் அப்படி உரைத்தார். அது அப்பொழுதே முடிவு செய்யப்பட்டு விட்டது. 32. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சோதனைகள் வந்த போது, இஸ்ரவேல் சபைக்கு அது ஆட்டங்கொடுத்து விட்டது. என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கவில்லை-யானால், சபையானது சுலபமாக அசைக்கப்பட்டு விடுகிறது. தேவனே அவ்வித காரியங்களைச் செய்கிறார். தேவன் சபையினுள் சோதனைகளைக் கொண்டு வருகிறார். ஏனெனில் தேவனிடம் வரும் ஒவ்வொரு புத்திரனும் சோதிக்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, நிரூபிக்கப்படவேண்டும். வியாதி உன்னை அணுக அவர் அனுமதிக்கிறார். உன்னை சோதித்து நிரூபித்து நீ ஆபிரகாமின் வித்து என்பதைக் காண்பிக்கவே வியாதி உன்மேல் வர அவர் அனுமதிக்கிறார். அவர் தம்முடைய சொந்த சித்தத்தினால் அப்படிச் செய்கிறார். அவர் ஆபத்துக்கள் வர அனுமதிக்கிறார், உன் நண்பன் உனக்கு விரோதமாய் எழும்ப அவர் அனுமதிக்கிறார். இவை அனைத்தையும் அவர் அனுமதிக்கிறார். உன்னை சோதிக்க அவர் பிசாசானவனை கட்டவிழ்த்து விடுகிறார். உன் உயிரை எடுத்துக் கொள்வதைத் தவிர மற்றெல்லாவற்றையும் அவன் செய்கிறான். உன்னைத் துன்பம் என்னும் படுக்கையின் மீது எரிய உன் அயலாரை உனக்கெதிராக அவன் எழும்ப பண்ணமுடியும். சபையும் உனக்கு விரோதமாய் எழும்ப அவன் கிரியை செய்ய முடியும். அவன் எதையும் செய்ய முடியும். ஆனால் அப்படி அவன் செய்வது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. அத்தகைய சோதனை பசும் பொன்னிலும் விலையேறப்பெற்றது என்று நாம் போதிக்கப்பட்டுள்ளோம். 33. வாக்குத் தத்தம் பெற்றவனும், யேகோவாவை விசுவாசித்தவனும், அவரை அறிந்து விசுவாசத்தில் உண்மையாயிருந்தவனுமான ஆபிரகாமுக்கு அவன் ஈசாக்குடன் சென்றபோது, அந்த மலையின் மேல் என்ன நடந்தது-? அவனுக்கு அங்கு நேர்ந்த அந்த பரீட்சையின் மூலமாகவே அவர் கீழ் நோக்கி, "வித்து வாசலைச் சுதந்தரிக்கும். இவைகளைச் செய்வேன் என்று நான் என் பேரில் ஆணையிட்டேன்'' என்றார். ஆணையிட அவரைக் காட்டிலும் பெரியவர் இல்லாததனால், அவர் தம் பேரில் ஆணையிட்டார். ஆக. அவர் ஆபிரகாமை முடிவு வரை பரீட்சித்தாரெனில், அவர் முடிவு வரை - -- நாம் தீர்மானிக்கும் சமயம் வரும் வரை -- உன்னையும் என்னையும் பரீட்சித்தே தீருவார். அச்சமயம் எல்லாம் உன்னை விட்டு அகன்றிருக்கும். அங்கே நீ தனியாக நிற்க நேரிடும். அல்லேலூயா-! அது உண்மை-! 34. தனித்து நில்-! வெளியரங்கமாக "அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்" என்று சொல், ஆபிரகாமின் சந்ததி அவ்வாறே கூறும். அவர் தான் அந்த வாக்குத்தத்தத்தைச் செய்கிறவர். மற்றவர்கள் என்ன கூறினாலும் என்ன செய்தாலும் பரவாயில்லை. "நானும் என் வீட்டாருமோ என்றால், கர்த்தரையே சேவிப்போம்'' என்று சொல்-! மற்றவர் யாவரும், "அந்த அனுபவமெல்லாம் ஒன்றுமில்லை. அது உணர்ச்சியேயன்றி வேறொன்றுமில்லை'' என்று கூறினாலும் , "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்-!” என்று சொல். இங்கே நானும் பவுலுடன் சேர்ந்து "இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனை நான் ஆராதனை செய்கிறேன்" என்று கூற விரும்புகிறேன். அர்த்தமற்று பேசுகிறவர்கள் சபையினுள் புகுந்தாலும், அவர்கள் பேச்சு மாற்றுகிறவர்-களாயிருந்தாலும், அவர்களில் எல்லா விதமான கள்ளத் தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அயலகத்திலும் சுற்றிலுமுள்ள பலவிதமானவர்கள் சபையில் வந்து ஜனங்களுடன் கலந்தாலும், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்-! எல்லாரும் சபைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாலும், சபையானது தணிந்து போய் சிரத்தையற்று இருந்தாலும் நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்-! ஒரு சிலருக்காக ஜெபித்து அவர்கள் குணமடையவில்லை என்றாலும் அது என் விசுவாசத்தைக் குறைக்காது. நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்-! 35. மனிதர் தவறாதவர்களல்ல. ஆனால் தேவன் தவறாதவர். மனிதனே, நீ ஒரு மனிதன் மேல் உன் நம்பிக்கையை வைத்தால், அவன் தவறிப்போவான். அவன் வேண்டுமென்று அப்படி செய்வதில்லை, ஆனால் அவன் தவறுகிறான். மனிதன் மேல் நீ வைத்துள்ள விசுவாசத்தை அகற்றவே தேவன் அவனைத் தவறிழைக்க அனுமதிக்கிறார். நம்முடைய விசுவாசம் மனித ஞானத்தில் அல்ல. அது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் இருக்கிறது. அங்கே தான் ஆபிரகாமின் உண்மையான வித்து அந்த வாக்குத்தத்தத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியைப் பெற்றால் மாத்திரமே அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாராக முடியும். பரிசுத்த ஆவி பெறாவிடில் அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரல்ல. ஆபிரகாமிலிருந்த அதே விசுவாசம் பரிசுத்த ஆவியின் மூலம் விசுவாசிக்குள் வருகிறது. என்ன நேர்ந்தாலும் அல்லது காரியங்கள் எவ்வளவு விபரீதமாக நடந்தாலும், விசுவாசியானவன் அணிவகுத்து முன் செல்கிறான். 36. வேவு பார்க்கப் போனவர்கள் திரும்பி வந்து, "ஓ, அந்த தேசத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வது மூடத்தனம். இனி தொடர்ந்து செல்ல அவசியமில்லை. ஏனெனில் அங்குள்ள ஜனங்கள் ராட்சதரைப் போல இருக்கிறார்கள். அவர்களுடைய அரசு மிகப் பெரியது. அவர்களிடம் ஈட்டி இருக்கிறது. ஏன், அவர்கள் முன்னால் நாம் வெட்டுக்கிளிகளைப் போல காணப்படுகிறோம்” என்றார்கள். 37. எனக்குத்தெரியாது. ஆனால் யோசுவா ஒரு குட்டையான மனிதனாயிருந்தான். ஒரு சின்னஞ்சிறு பையனாயிருந்தான் என்று ஊகிக்கிறேன். அவன் ஒரு பெட்டியின் மேல் குதித்து ஏறி இருபது லட்சம் பேர் முன், "மனிதரே, சகோதரரே, நாம் அவர்களை நிச்சயமாக முறியடிப்போம்'' என்று கூறியிருப்பான் என்று எண்ணுகிறேன். பாருங்கள். ஏன்-? அவன் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தான். தேவன் ஒரு வாக்களித்திருந்தார். அது அவர்களுடைய உரிமையாகும். தேவன் வாக்களித்திருந்தார். எனவே அதற்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் ஆபிரகாமின் உண்மையான சந்ததி, "தேவன் அதை நமக்குக் கொடுத்திருக்கிறபடியினால், நாம் அதைப் பிடித்துக் கொள்வோம்-!" என்றது. 38. இன்று காலை இங்கு நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஜீவனுள்ள தேவனுடைய சபை இங்கு நின்று கொண்டிருக்கிறது. யார் என்ன கூறினாலும், வைத்தியர்கள் என்ன கூறினாலும், மற்றும் அவிசுவாசிகள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நம்மை எதிர்த்து நிற்கும் அனைத்தையும் நாம் வென்று விடுவோம். நாம் ஆபிரகாமின் சந்ததியார். நம்முடைய பகைஞனின் வாசல்களை நாம் சுதந்தரித்துக்கொள்வோம். பகைஞன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் கவலையில்லை. தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்-! அது அவர்களுடையது, அவர்களுடைய உரிமை. 39. சுகமாகுதல் உங்களுடைய உரிமை. இரட்சிப்பு உங்களுடைய உரிமை. பரிசுத்த ஆவி உங்களுடைய உரிமை. இன்று இந்த தேசத்தில் ஆயிரக்கணக்கான பிரசங்கிகள், "அது அப்படி அல்ல" என்கின்றனர். ஆனால் அது அப்படித்தான் என்று ஆபிரகாமின் சந்ததிக்குத் தெரியும். அவர்கள் உட்புறம் வழி வகுத்து தங்கள் பகைஞருடைய வாசலை சுதந்தரிக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வார்கள் என்று தேவன் கூறியிருந்தார். அது ஒரு வாக்குத்தத்தமானதால் அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். "அவனுடைய சந்ததியார் பகைஞரின் வாசலைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.'' இப்போது நீங்கள் சோதனையிலும் துன்பத்திலும் கடந்து செல்வீர்கள். 40. யோசுவா அங்கே உண்மையுள்ளவனாய் நின்றான். அந்த சிறு தோற்றம் உள்ளவன், "அவர்கள் எவ்வளவு பலவான்கள் என்பதைக்குறித்து எனக்குக் கவலையில்லை. அவர்கள் எத்தகைய ஈட்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் எனக்குக் கவலையில்லை . அவர்களில் நகரமதில்கள் எவ்வளவு உயரம், எவ்வளவு பெரியது என்பதைக் குறித்து கவலையில்லை . நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்னவென்றால், 'அந்த வாசலை தேவனுடைய பிள்ளைகளின் சந்ததியார் சுதந்தரிப்பார்கள்' என்பதே. நாம் அதை கைப்பற்றப்போகிறோம். அவர்களைக் காட்டிலும் நாம் பலவான்கள் " என்றான். ஓ-! அதுவே உண்மையான சந்ததி. 41. மாமிசப்பிரகாரமான சந்ததியாரோ, "எங்களால் அப்படிச் செய்யமுடியாது. முயற்சி செய்வது அவசியமில்லை . அதுவுமின்றி, அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையுள்ளவர்கள், நம்மைக் காட்டிலும் தீரமுள்ளவர்கள்'' என்றனர். என்ன நேர்ந்த போதிலும் யோசுவா பின் வாங்கவில்லை. அவர்களுடைய கண்கள் கண்டவைகளின் பேரில் அவர்கள் சார்ந்திருந்தார்கள். ஆனால் யோசுவாவோ தேவன் உரைத்ததன் நிறைவேறுதலை எதிர்நோக்கியிருந்தான். 42. ஆபிரகாமின் சந்ததியார் இயற்கையான காரியங்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தத்தையே காண்கிறார்கள். ஆபிரகாம் இயற்கையான காரியங்களின் மேல் நோக்கமாயிருந்திருப்பானானால், என்ன நடந்திருக்கும்-? சாராள் தொண்னூறு வயதுள்ளவளாயிருந்தாள்; அவன் நூறு வயதுள்ளவனாயிருந்தான். அவள் சிறுமியாயிருந்த காலத்திலிருந்தே அவன் அவளுடன் வாழ்ந்து வந்தான். அவனும் அப்பொழுது ஒரு சிறுவனாயிருந்தான். ஆயினும் அவர்கள் குழந்தையற்று இருந்தார்கள். ஆனால் அவனோ அந்தக் காரியங்களைக் குறித்து யோசிக்கவில்லை. அத்தகைய காரியங்கள் இல்லாதவை போல் அவன் பாவித்து, "ஆபிரகாமே, நான் உன்னை ஆசீர்வதிப்பேன். சாராளின் மூலமாக உனக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பேன்" என்று தேவன் கூறின வாக்குத்தத்தத்தின் பேரில் மாத்திரமே அவன் நோக்கமாயிருந்தான். அவன் அதை விசுவாசித்தான். நாம் நமக்கு வரும் எதிர்ப்புகளைக் காணாமல் தேவன் கூறினதன் பேரில் நோக்கமாய் இருக்கிறோம். தேவன் அதை உரைத்தார். அதனுடன் அது நிறைவு பெறுகிறது. 43. அவர்கள் யோர்தான் நதிக்கு வந்த போது, யோசுவா காவற்படையின் தளபதியாக ஆக்கப்பட்ட போது, அவர்கள் தண்ணீரின் கரையோரம் வந்து மறுபுறத்திலுள்ள எரிகோ பட்டணத்தைக் கண்டார்கள். ஆனால் யோசுவா தன் ராணுவத்தை ஆயத்தமாக வைத்திருந்த போது, அவர்களுக்கு இடையே அந்த வாசல் நின்றது. அந்த வாசல் யோர்தான் நதியே. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம் ஒவ்வொரு வாசலண்டையும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. அது எத்தகைய வாசலாயிருந்தாலும் சரி, தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும். "அவன் பகைஞனுடைய வாசலை சுதந்தரித்துக் கொள்வான்." அத்துடன் அது நிறைவு பெறுகிறது. அன்று காலை அவன் யோர்தான் நதிக்கரைக்கு வந்தபோது, ஒருவேளை பிசாசு புயல்காற்றையும், மேகத்தையும் எல்லா இடத்திலும் பரவ வைத்து, அந்த பெரு நதியின் கலங்கின தண்ணீரை பலமாய்ப் பாயவைத்து, வயல்களின் மேல் வெள்ளத்தைப் புரள வைத்திருப்பான் என்று அனுமானிக்கிறேன். ஓ, அது எப்படிப்பட்ட சோதனையின் சமயமாயிருந்திருக்கும்-! ஆனால் யோசுவாவோ, "ஆயத்தமாயிருங்கள், நீங்கள் தேவனுடைய மகிமையைக் காணப்போகிறீர்கள்-!'' என்றான். அவர்கள் தங்களைச் சுத்திகரித்து ஆயத்தமானார்கள். எல்லாம் எதிராயிருந்தபோதிலும் அவர்கள் தயாரானார்கள். ஆனால் அது, "நான் அந்த வாசலை அவனுக்கு கொடுப்பேன்'' என்று தேவன் வாக்களித்து ஆணையிட்ட ஆபிரகாமின் சந்ததியாயிருந்தது. அவன் யோர்தானுக்கு வந்தான். அது அவனுக்கு வாசலாயிருந்தது. அவன் அதை சுதந்தரித்துக் கொண்டான் -! 44. என்றாவது ஒரு காலை வேளையில் நானும் அந்தக்கடைசி வாசலுக்கு வர வேண்டும். நீங்களும் யோர்தானுக்கு வந்தே தீர வேண்டும். ஆனால் ஆபிரகாமின் வித்து அந்த வாசலைச் சுதந்தரித்துக் கொள்ளும். அது என்னவாயிருந்தாலும் சரி, நீங்கள் பகைஞர் ஒவ்வொருவரின் வாசலையும் சுதந்தரித்துக் கொள்வீர்கள். 45. அந்த மனிதர்களெல்லாம் பெரியவர்களாயிருந்தார்கள். அவர்கள் வரிசைக் கிரமத்தில் மரித்தார்கள். ஆனால் முடிவில் ஒரு நாள் யூதேயா நாட்டின் பெத்லகேமில் அந்த ராஜரீக வித்து பிறந்தது. அதற்கு மற்றவர்களெல்லாம் வெறும் சாயலாக இருந்தார்கள். அந்த ராஜரீக வித்து மனிதனால் உண்டாகாமல், ஒரு கன்னிகையின் மூலம், தமது நரம்புகளில் வல்லமயுடையவராக, மரணத்தையும் நரகத்தையும் ஜெயிக்கப் பிறந்தார். தேவன் ஒரு வாக்குத்தத்தம் செய்திருந்தார். சாதாரண ஒரு மனிதன் அத்தகைய வாக்குத்தத்தம் செய்திருக்க முடியாது. ஆனால் தேவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணுவாரானால், சில நிமிடங்களுக்கு முன் நான் கூறினவாறு, ஆபிரகாமோடு இருந்து வாசலைச் சுதந்தரித்துக் கொள்ள ஆவன செய்த அதே கர்த்தராகிய யேகோவா-யீரே இப்பொழுதும் இருந்து வருகிறார். நாம் எவ்வாறு வாசலை சுதந்தரித்துக் கொள்வோம்-? யோசுவா மரித்தான், மோசே மரித்தான், மற்றவர் யாவரும் மரித்தார்கள், ஆனால் தேவன், "அவன் பகைஞனுடைய வாசலை சுதந்தரித்துக் கொள்வான்'' என்றார். அவன் மரணத்தை எப்படி ஜெயிப்பான்-? காரியங்களைச் செய்ய தேவன் ஒரு பிரத்தியேக வழி வகுத்திருக்கிறார். "அவன் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான்.'' 46. அந்த ராஜரீக வித்து பிறந்தார். நாம் சோதிக்கப்படுவதுபோல அவரும் எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். நீங்கள் எப்படி சோதிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறீர்களோ, அப்படியே அவரும் சோதிக்கப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியைப் பெற்ற மாத்திரத்தில் பிசாசு அவரை சோதிக்க வனாந்திரத்துக்கு கொண்டு சென்றான். அங்கே 40 நாட்களாய் இரவும்பகலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் அங்கிருந்து வந்த போது..... அவருடைய மரணத்தில் அவருடைய கைகளில் ஆணிகள் அடித்தார்கள், முகத்தில் துப்பினார்கள். அவர் ஒவ்வொரு வியாதியையும் கடந்து சென்றார். அவர் உலகத்தில் இருந்த போது, அவர் வியாதியின் மேல் ஜெயங்கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார். பேதுருவின் மாமியார் ஜூரமாய் படுக்கையில் இருந்த போது அவர் அவளைத் தொட்டார். உடனே ஜூரம் நீங்கினது. அந்த அசுத்தமான குஷ்டரோகி வாசலண்டையிலே "நான் அசுத்தமானவன், அசுத்தமானவன்; உமக்குச் சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் " என்று கதறினான். 47. அவரோ, "எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு" என்றார். அவர் ஜெயங்கொண்டு குஷ்டரோகத்தின் வாசலைக் கைப்பற்றினார். அவர் ஜூரங்களின் வாசலைக் கைப்பற்றினார். இயற்கை ஒவ்வொன்றையும் அவர் தமக்குக் கீழ்ப்படியவைத்தார். அவர் ஆபிரகாமின் வித்தாயிருந்தார், ராஜரீக வித்தாயிருந்தார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாயிருந்தார். அவர் மூலமாக ஆபிரகாம் முதல் அந்த ராஜரீக வித்து வரை வந்த எல்லா சந்ததிக்கும், அவருக்குப்பின் வரும் எல்லா சந்ததிக்கும், அந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. தேவனுடைய வாக்குத்தத்தம் சாத்தியமாய் இருக்கிறது. அவர் வியாதியை ஜெயித்தார். அவர் சோதனையை ஜெயித்தார். பகைஞன் அவர் முகத்தில் துப்பின போது, கன்னத்தில் அறைந்த போது அவர் மறுகன்னத்தைக் காட்டினார். அவருடைய முகத்திலிருந்த தாடியை இழுத்து அவரைத் துப்பினபோது அவர் ஒரு போதும் கோபங்கொள்ளவில்லை (riled). அவர் சோதனையின் வாசலை ஜெயித்து அதை கைப்பற்றினார். 48. “என்னுடைய கோபம் அப்படி ஜெயங்கொள்ள என்னை விடுவதில்லை '' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் ஆபிரகாமின் வித்தாயிருப்பது உண்மையானால், அவர் உங்களுக்காக அதையும் ஜெயித்திருக்கிறார். 49. அவருக்கு கோபம் மூள அவர்கள் செய்தபோது அவர் கோபங்கொள்ளவில்லை. அவர் கேலி செய்யப்பட்டபோது அவர் மௌனமாயிருந்தார். அவர் பிசாசு என்று அழைக்கப்பட்டபோதும் அவர் பேசாமலே இருந்தார். அவருக்கு ஒரு வேலை இருந்தது. அது பிதா அவருக்களித்த வேலையாயிருந்தது. அதைத் தான் அவர் எங்கும் சென்று செய்து கொண்டிருந்தார். முடிவில் அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். மரணம் அவரைச் சந்திக்க நேர்ந்தது. மற்ற எல்லாரும் கடலை ஜெயித்தனர். இயற்கையை ஜெயித்தனர்; சிங்கங்களை ஜெயித்தனர்; அக்கினியை ஜெயித்தனர்; எல்லாவற்றையும் ஜெயித்தனர். மரணத்தைத் தவிர மற்றெல்லாவற்றையும் ஜெயித்தனர். ஆனால் அங்கே இருந்த ஒருவருடைய சிந்தையிலும் நரம்பிலும் மாத்திரம் - மரணத்தை ஜெயிக்கும் வல்லமை இருந்தது. எனவே அவர்கள் அவருடைய கையைப் பிடித்து, அவரை சிலுவையின் மேல் படுக்கவைத்து, ஆணி அடித்தார்கள். எலும்பு காணப்படும் வரை அவர்கள் அவரை வாரினால் அடித்தனர். அவர்களால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர்கள் செய்து முடித்த பின் மரணம் அவரை அடித்து, "யோசுவாவை நான் எடுத்துக்கொண்டது போல உன்னையும் எடுத்துக் கொள்வேன். தானியேலை எடுத்துக்கொண்டதுபோல உன்னையும் எடுத்துக் கொள்வேன். உன்னை மரிக்கச் செய்வதற்காகவே இவை அனைத்தையும் நான் செய்கிறேன்” என்றது. 50. அவர் மரித்தார். அதைக் கண்டு சூரியன் தன்னைக் குறித்து வெட்கப்பட்டது. அவர் மரணத்தைக் கண்டு இயற்கை வெட்கப்பட்டு தனது கிரியைகளை நிறுத்திக் கொண்டது. சூரியன் மத்தியான வேளையில் அஸ்தமனமானது. நட்சத்திரங்கள் வெளியே வந்து பிரகாசிக்கவில்லை . எல்லா மூலப் பொருட்களும் கறுத்துப் போய், நீங்கள் உங்கள் முன்னால் நீட்டப்பட்டுள்ள கையைக் காண முடியாத அளவுக்கு மத்தியானத்திலே இருள் சூழ்ந்தது. இயற்கையானது, "நானும் அவருடனே மரிக்கட்டும்'' என்று சொல்லியிருக்கும் என்று ஊகிக்கிறேன். 51. ஆனால், சகோதரனே, பிசாசு அவருடைய விலையேறப் பெற்ற ஆத்துமாவை நரகத்தின் பாதாளக் குழிக்குக் கொண்டு போனான். அங்கே வாசல்கள் திறவுண்டன. அவைகளை அவர் ஜெயித்து மூன்றாம் நாள் வெளியே வந்தார்-! ஆமென்-!-! "அவனுடைய வித்து பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்ளும்''. அவர் மரணத்தை ஜெயித்தார்-! நரகத்தை ஜெயித்தார்-! உயிர்த்தெழுந்த அந்த காலையிலே அவர் கல்லறையை ஜெயித்தார் -! நம்மை நேசிப்பவரின் மூலமாய் இப்போது, நாம் ஜெயங்கொண்டவர்களாய் நிற்கிறோம் -! 52. புறக்கணிக்கப்பட்டிருந்த புறஜாதிகளினின்று வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒரு சந்ததியை தெரிந்தெடுக்கவும், அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளித்து, அவர்களை வாக்குத்தத்தத்துக்குள் கொண்டு வரவும் கருதி, அவர் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியை அனுப்பினார். எல்லா வியாதிகளையும் ஜெயிக்க நமக்கு இப்போது உரிமையுண்டு. நாம் அதை ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கெனவே ஜெயிக்கப்பட்டுள்ளது. நாம் அந்த வாக்குத் தத்தத்தின் மேல் உரிமை கொண்டாடி அதை கைப்பற்ற வேண்டும். மரணம் மேற்கொள்ளப்பட்டு விட்டது. நரகம் மேற்கொள்ளப்பட்டு விட்டது. வியாதி மேற்கொள்ளப்பட்டு விட்டது. சோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது. நாம் அவைகளின் வாசலில் நின்று கொண்டு, அதை சுதந்தரித்துக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். துப்பாக்கியால் சுட்டு ஜெயிக்க வேண்டும் என்ற அவசியமில்லை . அதற்காக ஏற்கனவே கிரயம் செலுத்தப்பட்டு விட்டது. 53. அவன் தன் பகைஞரின் வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான். எத்தனை கோடான கோடி பகைஞர்கள்-? அவன் ஒவ்வொரு பகைஞனின் வாசலையும் சுதந்தரிப்பான், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் அதை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அதை சுதந்தரித்துக் கொள்கிறோம். அது இலவசமாக அளிக்கப்பட்ட ஒரு ஈவு. எல்லாவற்றைவிட அவர் செய்த ஒவ்வொரு காரியத்தின் மூலமாக அவர் ஒவ்வொரு வாசலையும் ஜெயித்தார். அவர் வியாதியை ஜெயித்து வாசலைக் கைப்பற்றினார். நாம் செய்யவேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், நாம் வாசல் வரைச் சென்று, "ஜெயங்கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே " என்று சொல்வதே, ஆமென். 54. மரிக்கும் நேரம் வரும்போது, மரணம், "அவன் தன் மதத்தை விட்டு விடச் செய்கிறேன் பார்" என்கிறது. 55. ஆனால், ஆபிரகாமின் வித்தோ வாசலைச் சுதந்தரிக்கிறது "யோர்தான் நதியே, நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பின் சுருண்டு போ-!" என்று அது கட்டளையிடுகிறது. 56. ஏன், ஆபிரகாமின் சந்ததியானாகிய பவுலின் தலையை வெட்ட அவர்கள் வகை தேடினபோது அவன், "மரணமே-! உன் கூர் எங்கே-? பாதாளமே-! உன் ஜெயமெங்கே-? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் " என்றான். 57. அவன் தன் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்து அதைக் கைப்பற்றுவான். இப்போது அவன் வாசலினருகே அடிபட்டு தோல்வியடைவதில்லை. அவன் ஜெயங் கொண்டு அதைக் கைப்பற்றுவான், அதை சுதந்தரித்துக்கொள்வான்-! தேவனுடைய சொந்த வல்லமையின் மூலம் அவ்வாறு செய்வான். 58. ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே இன்று காலை எல்லா வியாதிகளையும் சுகப்படுத்த வல்லமையுண்டு. ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே எல்லா சோதனையையும் வெல்ல வல்லமையுண்டு. ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே, இன்று காலை, பாவத்திலிருந்து மாறி அதை வெளியே எறியவும், இயேசு கிறிஸ்துவின் சபையிலே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவும் வல்லமையுண்டு. "நீங்கள் விரும்புகிறதெதுவோ அதை என் நாமத்திலே கேளுங்கள், அப்போது அது உங்களுக்கு அருளப்படும். இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் (அவர்கள் ஆபிரகாமின் சந்ததி அல்ல, மறுபிறப்பு அடையாத சந்ததி ) என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனென்றால் உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே இருப்பேன், உங்களுக்குள் இருப்பேன்''. யார் அது-? அந்த ராஜரீக வித்து. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் உங்களுடனே கூட இருப்பதை நிரூபிப்பேன். ஏனென்றால் விசுவாசிப்பவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும்.'' அவன் தன் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான். அவனுடைய சந்ததி தம் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அந்த வாசல் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை . வியாதி, சோதனை, பாவம் --- எந்த வாசலாயிருந்தாலும் அது ஜெயிக்கப்பட்டு இருக்கிறது. அதை ஆபிரகாமின் சந்ததியார் சுதந்தரித்துக் கொள்வார்கள். 59. இன்று காலையிலே நாம் முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாய் --- முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாய் --- நிற்கிறதைக் குறித்து மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோமல்லவா-? இனி போரிடுவதற்கு எதுவுமில்லை. போர் முடிந்தது. எக்காளம் ஊதப்பட்டு, கொடி நாட்டப்பட்டது. ஒவ்வொரு பாவச் குவியலின் மத்தியிலும், ஒவ்வொரு வியாதியஸ்தரின் அறையிலும், ஜெயங்கொண்ட இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட அந்தக் கரடு முரடான சிலுவை ஊன்றப்பட்டு இருக்கிறது. நாம் செய்யவேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், நாம் அந்த சிலுவையை நோக்கிப் பார்த்து, விசுவாசித்து, வாழ வேண்டும். "நான் உங்களுடனே இருப்பேன். அதை நிரூபிப்பேன்-!" கடைசி நாட்களில் ஜனங்கள் வந்து, 'அது முந்தையக் காலத்துக்குரியது' என்பார்கள். ஆனால் நான் உங்களுடனே இருப்பேன், நான் உலகத்தில் இருந்த போது செய்த அதே காரியங்களை உங்களுக்குள் இருந்து செய்து கொண்டிருப்பேன், அப்போது நீங்கள் கண்டு கொள்வீர்கள். என் ஜனங்கள் என்னைக் காண்பார்கள். ஆபிரகாமின் வித்து என்னைக் காணும். அவர்கள் என்னை அறிந்து கொள்வார்கள். என்னை அவர்கள் கண்டு கொள்வார்கள். மற்றவர்களோ என்னை முன் காலத்தில் அழைத்தபடியே 'பெயெல்செபூல்' என்று அழைப்பார்கள். நீங்கள் என்னை அறிந்து கொள்வீர்கள். ஏனென்றால் நான் உங்களுடனே இருப்பேன். நீங்கள் என்னைக் காண்பீர்கள். உங்கள் கண்களால் காண்பீர்கள். நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனேகூட இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த அதே கிரியைகளை தானும் செய்வான். "அதே விதமான கிரியைகள்-!'' 60. இன்று ஜீவனுள்ள தேவனுடைய சபை ஜெயங்கொண்டு, உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது சபையிலே ஜீவனுள்ளவராக நின்று, அவர் செய்த கிரியைகளை இப்பொழுதும் மறுபடியும் செய்கிறதைக் காணும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளது. அப்படியானால் நாம் ஒவ்வொரு பகைஞனுடைய வாசலையும் சுதந்தரித்து விட்டோம். 61. இன்று காலையிலே உனக்கெதிராய் ஒரு பகைஞன் இருப்பானானால், என் சகோதரனே, நீ ஆபிரகாமின் வித்தாய் இருப்பாயானால், இதைக் கேட்ட பின், நீ அவனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வதிலிருந்து தடைசெய்ய நரகத்தில் போதிய பிசாசுகள் இல்லை. அது திறவுண்டு போகும். அது என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீ வாக்குத்தத்தத்தின் வித்தாக அங்கே நடந்து சென்று, "நான் இதைச் சுதந்தரித்துக் கொள்கிறேன். இது என்னுடையது. ஏனென்றால், தேவன் தாமே இயேசுவை எழுப்புவதாகவும், அவர் மூலம் நான் இதை ஜெயிப்பேன் என்றும் ஆணையிட்டுள்ளார். ஜெயங்கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் வருகிறேன். பின்னால் போ, நான் நுழைந்து செல்லப் போகிறேன்-!'' என்று சொல்வாயாக. ஆமென். "அவன் தன் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான்". பின்னர் இயேசு கிறிஸ்துவின் ரத்ததினால் மூடப்பட்டு, உன் கேடயம் துலங்க, உன் மார்பைத் தள்ளி எழுந்து நில். பகைஞன் அதைக் கண்டுகொள்வான். 62. ஏதாகிலும் உனக்கு அவசியமிருந்தால் இப்போது நாம் ஜெபிக்கையில் நீ அவரிடம் கேள். இன்று காலையிலே இங்கே இருக்கும் நீங்கள், உங்களுக்கு ஏதாகிலும் அவசியமானால், நீங்கள் தலை குனிந்து இருக்கையில், நீங்கள் உங்கள் கைகளை இயேசுவிடம் நீட்டி, உங்கள் இருதயத்தில் அவரிடம் கேளுங்கள். உங்கள் இருதயங்களில் நீங்கள், "கர்த்தாவே, என் அவசியத்தை நீர் அறிவீர். இந்தக் காலையிலே, 'அவன் பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்துக் கொள்வான்' என்று சொல்லப்பட்டதை நான் கேட்டது வேதாகமத்தில் உள்ளது. நான் அந்த வாசலைச் சுதந்தரிக்க வருகிறேன். ஒருவேளை எனக்கு கோபமுள்ள சுபாவம் இருக்கலாம். பாவம் என்னைக் கட்டிக் கீழே விழச்செய்துள்ளது. எனக்குப் பரிசுத்த ஆவி அவசியம், எனக்கு தேவையுண்டு. ஆனால் நான் அந்த வாசலுக்கு வருகிறேன்'' என்று கூறுங்கள். "அந்த வாசலை இன்று காலை நான் கைப்பற்றப் போகிறேன். எனவே, வாசலே திறவுண்டு போ. நான் நுழைந்து வருகிறேன்” என்று சொல்லுங்கள். 63. ஸ்தோத்தரிக்கப்பட்ட ஆண்டவரே, உயர்த்தப்பட்ட கரங்களை நீர் கண்டீர். கர்த்தாவே, இது உம்முடைய வார்த்தை என்பதை அறிந்திருக்கிறீர். வேதாகமத்திலிருந்து, வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள ஜனங்களைக் குறித்து நான் எடுத்துரைத்து, அவர்கள் எப்படி ராஜ்யங்களை முறியடித்து நீதியை நிலை நாட்டினார்கள் என்றும், அக்கினியின் தீவிரத்தை எப்படி அணைய வைத்தார்கள் என்றும், பட்டயத்தின் முனையிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்றும், சிங்கங்களின் வாய்களை எப்படிக் கட்டினார்கள் என்றும் , ஓ, அவர்களுடைய ஸ்திரீகள் எப்படி தாங்கள் சாகக் கொடுத்தவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள் என்றும், இன்னும் பலவற்றையும் எடுத்துரைத்தேன். ஏனெனில் ஆபிரகாமின் சந்ததியார் பகைஞனின் வாசலைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்பது உம்முடைய வாக்குத்தத்தம். நீர் உமது வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறவர். 64. இப்போதும் கர்த்தாவே, இங்குள்ளவர்களின் இருதயங்களிலுள்ள வாஞ்சையை அருளிச் செய்யும், இவர்கள் இங்கிருந்து வித்தியாசமானவர்களாய் செல்லட்டும். அவர்களுக்காக அந்த ராஜரீக வித்து ஜெயங்கொண்டதினால், இவர்களும் ஜெயங்கொண்டவர்களாயிருக்கின்றனர் என்பதை அறிந்தவர்களாய் இங்கிருந்து செல்லட்டும். அந்த ராஜரீக ராஜா, கன்னிகையின் மூலம் தோன்றினபோது, அவர் ஒவ்வொரு பகைஞனையும் ஜெயித்தார், மரணத்தையும் ஜெயித்தார். எனவே மரணம் ஆபிரகாமின் சந்ததியை பயமுறுத்த முடியாது. கடைசி சத்துருவாகிய மரணம் காலின் கீழ் நசுக்கப்பட்டு, தேவனுடைய புத்திரரில் கடைசி நபர் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசித்த பின்பு, நாங்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வோமென்றும், நாங்கள் மறுபடியும் மகிமையின் சரீரத்துடன் திரும்ப வருவோம் என்னும் வாக்குத்தத்தம் எங்களுக்குண்டு. 65. கர்த்தாவே, தங்கள் கரங்களை உயர்த்தியிருப்பவரில் பாவிகள் யாராகிலும் இருந்தால் அவர்களை இரட்சியும். பின் வாங்கிப்போனவர்கள், பின்வாங்கிப்போன நிலையிலேயே இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை உணரச்செய்யும். பின்வாங்கிப் போன வாசலை அவர்களால் ஜெயிக்க முடியும். ஒரு வேளை ஒருவன் கோபிக்கிறவனாகவோ, அல்லது கெட்டவார்த்தைகளைப் பேசும் நாவையுடையவனாகவோ, அல்லது இச்சிக்கும் இருதயத்தையுடையவனாகவோ, அல்லது பணவிஷயத்தில் கஞ்சனாகவோ, அல்லது அசுத்தமாகவோ இருக்கலாம். அவர்களும், அவர்கள் தாங்கள் அந்த வாசலை மேற்கொள்ளக்கூடும் என்பதைக் கண்டுகொள்வார்களாக. ஒருக்கால் அது வியாதியோ, துன்பமாகவோ இருக்கலாம். அந்த வாசல்களையும் அவர்கள் சுதந்தரித்துக்கொள்ள முடியும். ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.'' இன்று காலையிலே நாம் ஜெயங்கொண்டவர்களாய் இருக்கிறோம். அதை எங்களுக்குத் தந்தருளும், கர்த்தாவே. எல்லாவற்றிக்கும் மேலாக, அந்த மகத்தான காரியத்தைச் செய்தவர் எங்களோடு இருக்கிறார். இன்னும் கிரியை செய்வதாக அவர் வாக்களித்துள்ளார். "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் வாசம் பண்ணி உங்களுக்குள் இருப்பேன்''. பிதாவே, நீர் தாமே இன்று காலையிலே ஒவ்வொருவருக்கும் உம்மை வெளிப்படுத்தியருள வேண்டுகிறேன். இதை இயேசுவின் நாமத்திலே வேண்டிக்கொள்கின்றோம், ஆமென். 66. அது சாத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது சத்தியம் என்று பயபக்தியுடன் உன் இருதயத்தில் எவ்வித சந்தேகமுமின்றி விசுவாசிப்பாயாக. பரிசுத்த ஆவியின் கிரியை எளிமையாயிருப்பதனால், அறிவாளியின் சிந்தைக்கு அது குழப்பமாக இருக்கிறது என்பது நினைவிலிருக்கட்டும். இத்தகைய எளிமையான முறையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வார் என்று அறிவாளிகள் அறிவதில்லை . ஏன்-? "அவர் இப்படிச் செய்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை'' என்று தான் அவர்கள் கூறுவது வழக்கம். நான் என் சொந்த அறிவை உபயோகிப்பேனானால், "அது உண்மையாய் இருக்கமுடியாது" என்பேன். ஆனால் எக்காலத்திலும் அது தான் உண்மை -! அவர் மிக எளிய காரியங்களைச் செய்கிறார். அவர் தம்மை, தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்தவே அப்படிச் செய்கிறார். தேவன் தமது ஜனத்துடன் இருக்கிறார். அவர் தமது ஜனத்தின் மத்தியில் இருக்கிறார். அவர் அவர்களை நேசிக்கிறார். அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்யவும், உதவி செய்யவும் அவர் விரும்புகிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையல்ல, அவர் எதை ஏற்கனவே செய்து இருக்கிறார் என்பதை அறிவிக்கிறார். அவர் அதை ஏற்கனவே செய்து இருக்கிறபடியால் அது உங்களுடையதாயிருக்கிறது. அது உங்களுக்குச் சொந்தம். அது, நம்முடைய பிதாவாகிய தேவன் தமது சபைக்கு இலவசமாய் அளித்த ஒரு வரமாயிருக்கிறது. 67. தானியேலின் நாட்களிலும், எபிரெய புத்திரரின் நாட்களிலும், நாம் இன்று காலையிலே பேசினபடி, அன்று போல் இன்றும் அறிவு படைத்தவர்கள் அதை ஏற்றுக் கொள்வது கடினமாயுள்ளது. அது எக்காலத்தும் பகைஞனாயிருந்து வருகிறது. அவர்கள் காணும் விதம் மற்றும் நவீன விஞ்ஞான அறிவு போன்றவை அன்று போல் இன்றும் சிக்கலான விதத்தில் அமைந்து சிந்தையில் குழப்பத்தை உண்டாக்குகின்றது. ஆனாலும், "எல்லா காலங்களிலும் தேவன் கூறுவதே சரி, தேவனுடைய வார்த்தையே சத்தியம்,'' என்று தைரியமாய்க் கூறுபவர்களும் இருந்திருக்கின்றனர். 68. நீங்கள் ஜெயிக்க வேண்டுமென்று அவசியமில்லை, ஏனென்றால் அவரே அதை ஜெயித்துவிட்டார். நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், வாசலின் அருகே சென்று நின்று, "இது என்னுடையது, இது என்னுடையது, இரட்சிப்பை தேவன் எனக்கு ஏற்கனவே அளித்துவிட்டார். வாக்குத்தத்தமானது எங்களுக்கும், எங்கள் பிள்ளைகளுக்கும், தேவன் அழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று கூற வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். 69. இந்த என் பகுத்தறியும் ஊழியம் விரைவில் முடிவடையும். இந்த ஊழியம் முடிவடைந்ததும் இதைவிடப் பெரிதானதொன்று எப்பொழுதும் போல வரும், பாருங்கள், அது உயர்ந்து வருகிறது. கையைப் பிடித்து வியாதியை அறிதலிலிருந்து பகுத்தறியும் ஊழியத்துக்கு அது சென்றது. இப்போது அது இன்னும் பெரிதான ஒரு ஊழியத்துக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கிறது. விளங்குகின்றதா-? அதைக் கண்டுகொள்கிறீர்களா-? அதைப் பார்த்து அது சத்தியம் என்பதைத் தெரிந்துக்கொள்வீர்கள். அது இன்னும் பெரியதாகவும், உயர்வாகவும், மேலானதாகவும் இருக்கும். ஏன்-? அவர் அவ்விதம் வாக்களித்துள்ளார். அவர் வாக்களித்ததை அவர் நிறைவேற்றவும் செய்கிறார். அவர் வாக்குமாறாதவர். அது என்ன-? அது நம்முடன் சதாகாலங்களிலும் இருக்கும் அவருடைய பிரசன்னம்... அவர் உங்களுக்காக அந்த வாசலைக் கைப்பற்றினார் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறார். 70. அவர் அந்த ராஜரீகவித்தாயிருந்தார். அவராலேயல்லாமல் வேறொருவனாலும் அந்த வாசலைக் கைப்பற்றியிருக்கமுடியாது. முற்காலத்தில் இருந்தவர்கள் அவர் வருகைக்கு சாயலாய் இருந்தார்கள். ஆனால் அவர் வந்த போது முழுபோரும் முடிந்தது. கெத்செமனேவிலும் கல்வாரியிலும் அந்த போர் முடிவடைந்தது. இப்போது நாம் ஜெயங்கொண்டவர்களாய் நிற்கிறோம். பாருங்கள், நாம் போர் புரியவேண்டியதில்லை, போர் முடிவடைந்துவிட்டது. நாம் அதை உரிமையாக்கிக் கொண்டுள்ளோம். அதற்குரிய உறுதி பத்திரத்தை தேவன் நமக்கு தந்தருளி உள்ளார். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய கையை உயர்த்தி செய்த உறுதிமொழி என்னவென்றால், "அவனுடைய சந்ததி அவர்களுடைய பகைஞரின் வாசலைச் சுதந்தரிப்பார்கள் என்று நான் என் பேரில் ஆணையிட்டேன்'' என்பதே. அது தான் அந்த உறுதிமொழி ஏற்கெனவே அது சுதந்தரிக்கப்பட்டு விட்டது. "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானோம்.'' அது ஏற்கெனவே முடிந்து விட்டது - முடிவடைந்த கிரியை. நாம் அதை சுதந்தரிக்கிறோம். "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்-!'' இன்று காலையிலே இராஜா நம்முடனேகூட இருக்கிறார். பரிசுத்த ஆவி நம்மீது அசைவாடுவது அவருடைய மாபெரும் ஆசீர்வாதமாகும். இந்த மகிமையான உணர்ச்சியும், இது சரியானபடி தேவனுடைய வார்த்தையின் மேல் ஆதாரப்பட்டிருக்கிறது என்பதை அறிவதும், தேவன் நம்முடைய பிதாவுமாய் இருக்கிறார் என்பதும் நமக்கு ஒரு அற்புதமான ஆறுதலை அளிக்கிறது. 71. ஜெபச்சீட்டு கொடுத்திருப்பான் என்று நம்புகிறேன், இன்று காலை அவன் ஜெபச்சீட்டு கொடுத்தானா-? நமது கூடார சபையார் மாத்திரமிருந்தால், அல்லது மற்றவர் பத்து அல்லது பதினைந்து பேர் மாத்திரமே இருந்தால், அவர்களை இங்கே அழைத்து அவர்களுக்காக ஜெபிக்கலாம். ஆகவே ஜெபச்சீட்டு கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். இன்று காலை எங்களை சாராதவர் எத்தனை பேர்-? கைகளை உயர்த்துங்கள்-? கட்டாயம் பதினைந்து அல்லது இருபது பேர். சரி. இந்த ஜெபச் சீட்டுகளை வரிசைகிரமமாக்கி, அவர்களைப் பீடத்தண்டை கொண்டு வாருங்கள். பாருங்கள், நமது கூடார சபையாரைக் குறித்து அப்படி சொன்னதற்குக் காரணம், அவர்கள் எப்போதும் இங்கேயே இருக்கிறவர்கள். 72. இந்த பகுத்தறிதலை ஞாபகத்தில் வையுங்கள். இந்த பகுத்தறியும் வரம் விரைவில் முடிந்து விடும். இதைவிடப் பெரிதானது, மேலானது வந்து கொண்டிருக்கிறது. முந்தின நாள் அது நடந்த போது, என்னுடன் நின்றுக் கொண்டிருந்த இரண்டு சகோதரரை நான் காண்கிறேன். வரிசையாக மூன்று முறை அது நடந்தது. அது இப்போது சமீபமாயிருக்கிறது, அது நடைபெற இருக்கிறது. 73. இப்பொழுதும், கர்த்தாவே, நீர் தேவனாயிருக்கிறீர்; நாங்கள் உம்முடைய ஊழியர்களாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தைக்காகவும் எங்களுடைய இருதயங்களை ஆசீர்வதித்த பரிசுத்த ஆவிக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இங்கே உட்கார்ந்து, நாங்கள் ஜெயங்கொண்டவர்கள் என்பதை அறிந்து, மகிழ்ச்சியடைகின்றோம். நாங்கள் ஏற்கெனவே பகைஞனுடைய வாசலைச் சுதந்தரித்திருக்கிறோம். அது எங்களுக்கு அருளப்பட்டது. எங்களிடம் முக்கியத் திறவுக்கோல் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் நாமம் பகைஞனுடைய ஒவ்வொரு வாசலையும் திறக்கும். இயேசு என்ற நாமமாகியத் திறவுக்கோலை எடுத்து, எங்களைக் கட்டிவைத்திருக்கும் பகைஞனின் ஒவ்வொரு வாசலையும் திறப்போம். தேவனே, இன்று காலை இயேசுவின் நாமம் என்னும் திறவுக்கோலைக் கொண்டு வியாதியும் துன்பமுமான வாசல்களைத் திறக்க வருகிறோம். ஏனென்றால் அவருடைய வார்த்தையிலே, "என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; அவர்கள் சர்ப்பத்தை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று எழுதி இருக்கிறது. இவைகளெல்லாம் உண்மை என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, வார்த்தை மாமிசமாகி எங்கள் நடுவில் வாசம் பண்ணுகிறார் என்பதை நிரூபித்து இந்த ஜனங்கள் அதைக் காணச் செய்தருளும். எங்கள் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம் என்பதை இவர்கள் ஏற்றுக் கொண்டு, இன்று காலையிலே எல்லா பிணியிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட கிருபை செய்யும். இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 74. டெட்டி (Teddy) "நம்பிடுவாய்'' என்ற ஞானபாட்டை மெதுவாகவும் அமைதியாகவும் வாசிப்பீர்களா-? இப்போது ஒன்றிலிருந்து ஆரம்பிக்கட்டுமா-? ஜெபச்சீட்டு எண் ஒன்று... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, அல்லது எத்தனை எண்கள் இருக்கின்றனவோ அத்தனையும் நல்லது. அமைதியாக எழுந்திருந்து, வரக்கூடுமானால் இந்தப்பக்கம் வாருங்கள். ம்ம்-? நம்பர் ஒன்றையும் இரண்டையும் பார்ப்போம். நம்பர் ஒன்று ஜெபசீட்டு யாரிடமிருக்கிறது-? நம்பர் இரண்டு-? நல்லது, ஐயா. நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. 75. அவர்கள் வழியுண்டாக்கி, இங்கு வந்து நிற்கும் இவ்வேளையில் மற்றவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எத்தனை பேர்.... நமது கூடார சபையின் ஜனத்தில் யாராவது வியாதியாயிருகிறீர்களா-? கூடாரச்சபை ஜனம் கைகளை உயர்த்துங்கள். இந்த கூடாரச்சபையைச் சேராதவர்கள், ஒரு வேளை நீங்கள் ஆராதனைக்குப்பின் வந்திருக்கலாம், ஜெபசீட்டு பெறாமல் இருக்கலாம், உங்கள் கைகளை உயர்த்துங்கள். இந்த கூடாரச் சபையைச் சேராதவர்களில் யாருக்காவது தேவன் அவசியப்படலாம். இந்த கூடாரச்சபையின் அங்கத்தினராயிராமலிருந்தும், வியாதியாயிருந்து ஜெபச்சீட்டு இல்லாமலிருந்தும், தங்களை ஜெபத்திலே ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் இருக்கிறீர்களா-? அப்படிப்பட்ட ஒவ்வொருவரும் உங்கள் கைகளை உயர்த்துங்கள், சரி. அது நல்லது, சரி. 76. சில நிமிடங்கள் உங்களால் இயன்ற வரை பயபக்தியாக இருக்க வேண்டுகிறேன். பின்னர் நாம் ஆரம்பிக்கலாம். இப்போது பார்ப்போம். இன்னும் எவ்வளவு இடம் இருக்கிறது , பில்லி-? நல்லது, பத்தாம் நம்பர் ஆள் அங்கே இருக்கிறாரா-? நான் ஒன்று முதல் பத்து வரை அழைத்தேன். பதினொன்று, பன்னிரெண்டு , பதின்மூன்று , பதினான்கு , பதினைந்து, இப்போது நிற்கட்டும். பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, இருந்தால் எழுந்து நிற்கட்டும். நல்லது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, ஒன்றிலிருந்து பதினைந்து வரை, இரண்டு குறைவு. (சகோ. பிரான்ஹாம் மெதுவாகக் கணக்கிடுகிறார்---ஆசிரியர். பதினைந்து, பதினாறு , பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது. 77. ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் கூடாரச்சபையைச் சேராதவர்களுக்கு ஜெபச்சீட்டு கொடுக்கச்சொன்னேன். அது சரி. பாருங்கள். ஏனென்றால் இது பகுத்தறியும் வரம். ஜனங்கள் ''(பகுத்தறியப்பட்ட) இந்த ஜனம் கூடாரச்சபைக்கு வருகிறவர்களே" என்கிறார்கள். விளங்குகிறதா-? இங்கே இதுவரை வராதவர் கைகளை உயர்த்துங்கள். இதற்கு முன் இந்தக் கூட்டங்களுக்கு ஒரு போதும் வராதவர்கள். நல்லது, சகோ.டெட்டி (Teddy) சற்று நேரம் இருங்கள். 78. இப்போது நான் கேட்கிறேன்; இந்தக் கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா-? எல்லோரும் இந்தக் கூட்டங்களுக்கு வந்ததுண்டா-? பாருங்கள், இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே இருந்த போது, அவர் சுகப்படுத்துகிறவர் என்று தம்மை அழைத்துக் கொள்ளவில்லை. அவர் ஆபிரகாமின் வித்தாயிருந்தார், நிச்சயமாக. அவர் அவருடன் அந்த வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்தார். பிதா அவருக்குக் காண்பிக்கும் வரை அவர் தாமாகவே ஒன்றுமே செய்யவில்லை. அது சரிதானே-? அவர், " என்ன செய்ய வேண்டுமென்று பிதாவே காண்பிக்கும் வரை என்னால் ஒன்றும் முடியாது,'' என்றார். பரி.யோவான்-5:19, "பிதாவானவர் செய்வதைக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார்: அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்கிறது. 79. அவர் வந்து தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் ... தாவீதின் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது (டேப்பில் இந்த பாகம் காலி-ஆசிரியர்) ஆத்மீக அர்த்தத்தில் சொன்னால், யோவானால் அவர் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவி அவர் மேல் வந்த போது, அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவானார். அவர் பிறந்த போது, அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் கன்னிகையின் மூலம் பிறந்த தேவகுமாரனாய் இருந்தார். பரிசுத்த ஆவி அவர் மேல் வந்த போது, அவர் மேசியாவானார். எப்படியெனில், 'மேசியா' என்றால் 'அபிஷேகம்பண்ணப்பட்டவர்' என்று பொருள் விளங்குகிறதா-? பரிசுத்த ஆவி அவர் மேல் வந்த போது அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவரானார். "ஆட்டுக்குட்டியும் புறாவும்'' என்ற தலைப்பில் நான் பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறீர்கள். பின்னர் நாற்பது நாள் சோதிக்கப்பட்ட பிறகு அவர் வெளியே வந்தார் என்று காண்கிறோம். 80. அவருடைய ஊழியம் துவங்கினதும் முடிவடைந்ததும் எப்படி-? அவருடைய ஊழியத்தில் அந்திரேயா என்னும் பேர் கொண்ட ஒரு மனிதன் இருந்ததாக காண்கிறோம். அவன் தன் சகோதரனான சீமோனைக் கண்டு (அவன் ஒரு செம்படவன்) அவனை இயேசுவினிடம் அழைத்து வந்தான். இயேசு அவனிடம், "உன் பெயர் சீமோன். உன் தகப்பனாரின் பெயர் யோனா. இன்று முதல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய் " என்றார். பேதுரு என்றால் "ஒரு சிறு கல்" என்று பொருள், அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? இயேசு கூறினதைக் கேட்டு இந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான் -! மேசியா இத்தகைய காரியத்தை செய்ய வேண்டியவராக இருந்தாரா-? இதை புரிந்து கொண்டவர்கள் ஆமென் என்று கூறுங்கள் (சபையோர் "ஆமென் " என்கின்றனர் -- ஆசிரியர்) அவர் தேவன் தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டியதாயிற்று. ஆம், ஐயா-! மோசே,, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் " என்றான். 81. பின்னர், அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார் என்று பார்க்கிறோம். அவர்கள் யார்-? இயற்கையில் யூதர்களாகப் பிறந்தவர்கள். அவருக்குச் சொந்தமானவர்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை . ஆக, பின்னர் அவர் அவருக்குச் சொந்தமானவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், அவர் புறஜாதிகளிடம் திரும்பினார். ஆனால், "அவருடைய நாமத்தில் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்' இப்பொழுது அவர் புறஜாதிகளிடம் இருக்கிறார். ஆக, 2000 ஆண்டுகளாக அவர் புறஜாதியாருடன் இருந்து வருகிறார். அவர் செய்த காரியங்களை கவனியுங்கள். 82. இவைகளைக் கண்ட பின்பு பிலிப்பு சென்று நாத்தான்வேலைக் கண்டு, தான் யாரைக் கண்டான் என்றும் அவர் என்ன செய்தார் என்றும் சொன்னான். அது அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கினது. அவனால் அதை நம்பமுடியவில்லை . அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டு, அவன் கர்த்தராகிய இயேசுவின் சந்நிதானத்திலே நின்று, அதாவது அவருடைய முன்னிலையில் வந்த போது, இயேசு, “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். 83. நீங்கள் அங்கே நின்றுக் கொண்டு இருந்திருப்பீர்களானால், அவர் யார் என்பதைக் கண்டு கொள்வதற்கேற்ப ஆவிக்குரியவர்களாய் நீங்கள் இருந்திருப்பீகளா-? இப்போது கவனியுங்கள், பாருங்கள், அந்த மனிதன் ஒரு அந்நியன். அவன் ஒரு செம்படவனாய் இருந்திருப்பான். அவரோ ஒரு தச்சன், தச்சனாகத் தான் அவர் இருந்தார் -- நடுத்தர வயதுடைய மனிதன். அந்த தச்சன் நின்றுக் கொண்டிருக்கையில் அந்த மனிதன் வருகிறான், அவனைக் கண்டு, அவர் "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். சரி, அவன் இஸ்ரவேலன் என்பதை அவர் எப்படி அறிந்தார்-? அவன் உடுத்தியிருந்த விதத்தைக் கண்டல்ல. ஏனென்றால் அவர்களெல்லாரும் ஒரே மாதிரி தான் உடுத்தியிருந்தார்கள். " அவன் கபடற்றவன்''. அவன் கபடற்றவன் என்று அவர் எப்படி அறிந்தார்-? 84. அவன் உண்மையான விசுவாசியாய் இருந்ததால், அவன் ஆச்சரியப்பட்டு, "ரபீ" அல்லது சகோதரனே, போதகரே, பிரசங்கியே "நீர் எப்போது என்னைக் கண்டீர்-?'' என்றான். பாருங்கள், அவன் அவரைக் கேள்வி கேட்கிறான். 85. "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழ் இருந்த போது, நான் உன்னைக் கண்டேன்'' என்றார். அவன் அதற்கு , "நீர் தேவனுடைய குமாரன். இஸ்ரவேலின் ராஜா'' என்றான். 86. இயேசு, "நான் உன்னிடம் இதைச் சொன்னதினால் நீ விசுவாசிக்கிறாய், இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்றார். 87. அதனாலே தான் ஜீவனுள்ள தேவனுடைய சபை இப்போது இதைக் காட்டிலும் பெரிதான காரியத்தைக் காணும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இதை விசுவாசிக்கிறார்கள். எனவே கூடிய சீக்கிரம் அது வரக் காத்துக் கொண்டிருக்கின்றது . ஸ்தாபன கட்டுபாடுகளின் காரணமாக புறக்கணித்தவர்கள், இவைகளுள் எதையாவது விசுவாசிப்பார்களா என்பது சந்தேகம் தான். விளங்குகிறதா-? நீ வெளிச்சத்தில் நடப்பாய் அல்லது குருடனாயிருப்பாய். வெளிச்சம் பாதையைக் காட்டும், அல்லது குருடாக்கும். 88. "சுதந்திரத்தின் சிலை'' என்னுமிடத்தில் அந்த சிறு பறவைகளைக் கண்டேன். (சகோ. டோம்ஸ்-Toms) நீங்கள் அங்கே போனால் அதைக் கட்டாயம் பாருங்கள். அங்கே அவைகள் முட்டிமுட்டி மரிக்கின்றன. "என்ன சங்கதி-?'' என்று நான் கேட்டேன். 89. "வெளிச்சத்தைப் பின் தொடர்ந்தது போய் புயல் காற்றை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதை விட்டு, அவைகள் வெளிச்சத்தை முட்ட ஆரம்பித்து தற்கொலை செய்து கொள்கின்றன " என்றார்கள். 90. நீங்கள் வெளிச்சத்தை முட்டும் போது இது தான் நடக்கிறது-! நீங்கள் ஆவிக்குரிய விதமாய் உங்களை கொலை செய்து கொள்கிறீர்கள். அவர் ஒளியில் இருக்கிறது போல் நீங்களும் ஒளியில் நடவுங்கள். அப்போது நாம் ஒருவரோடு ஓருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; எல்லா சபைகளும் விசுவாசித்து முன்னேறி தேவனுடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்கும். அது மிகவும் அருமையாய் இருக்குமல்லவா-? 91. அந்த சமாரிய ஸ்திரியைப் பாருங்கள். அவள் ஒரு சமாரியப் பெண். யூதபெண் அல்ல. ஒரு சமாரியப்பெண். அவர், "தாகத்துகுத் தா'' என்றார். சம்பாஷனை தொடர்ந்தது. புதிதாகக் கூட்டத்துக்கு வந்திருக்கிறவர்களுக்காக உரைக்கிறேன். சம்பாஷனை தொடர்ந்தது. 92. அவர் மேசியா என்று அவள் அறியவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதனாய், யூதனாய் அவளுக்குக் காணப்பட்டார். அவள் முதலில் எப்படி பேசினாள் பாருங்கள். அவள், "ஏன் யூதர்களாகிய நீங்கள் சமாரிய ஸ்திரீயுடன் பேசுவது வழக்கமில்லையே. நம்மிடையே எவ்வித தொடர்பும் இல்லையே" என்றாள். 93. அவர், "உன்னுடன் பேசுகிறவர் யாரென்பதை நீ அறிவாயானால் குடிப்பதற்கு நீ என்னிடம் கேட்டிருப்பாய்; நான் உனக்கு இங்கு வந்து மொள்ளக் கூடாதத் தண்ணீரைக் கொடுப்பேன் " என்றார். 94. "ஒரு நிமிடம் பொறுங்கள். நாங்கள் இந்த மலையில் ஆராதனை செய்கிறோம். ஆனால் யூதராகிய நீங்கள் எருசலேமிலே ஆராதனை செய்கிறீர்களே” என்றாள் அவள். 95. இயேசு, “நீங்கள் எருசலேமில் அல்லது இந்த மலையில் தொழுது கொள்ளாமல், ஆவியில் தொழுது கொள்ளும் காலம் வரும், ஏனென்றால் தேவன் ஆவியாய் இருக்கிறார். அவரைத் தொழுதுக்கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுக் கொள்ளவேண்டும்'' என்றார். பார்த்தீர்களா-? அவர் தொடர்ந்து பேசினார், சம்பாஷனை செய்தார். அவளுடைய குறை எங்கு உள்ளதென்று அறியும் வரை இவ்வாறு பேசிக்கொண்டே சென்றார். அவளுடைய குறை எங்கிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா-? கிணற்றினடியில் இருந்த ஸ்திரீக்குக் குறை எங்கே இருந்தது என்று யாருக்காவது தெரியுமா-? அவளுக்கு அனேக புருஷர்கள் இருந்தனர். அல்லவா-? ஆக அவர், "போய் உன் கணவனைக் கூட்டிக் கொண்டு வா” என்றார், "எனக்குக் கணவன் கிடையாது " என்றாள் அவள். 96. அவர் "அது உண்மை, உனக்கு ஐந்து பேர் இருந்தனர், இப்போது இருக்கிறவன் உன் கணவனல்ல” என்றார். 97. அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள். வேதாகமத்தின் ஓரத்திலுள்ள குறிப்பைக் காண்பீர்களானால், மூல வேதாகமத்தில் அது, "ஐயா, நீர் அந்த தீர்க்கதரிசி தான் என்று அறிகிறேன்'' என்று இருக்கிறது. வேதாகமத்தில் அந்தத் தீர்க்கதரிசி என்றிருப்பதைக் கவனி, "அந்த தீர்க்கதரிசி'. அவர் எந்தத் தீர்க்கதரிசியாய் இருந்தார்-? ஒரு தீர்க்கதரிசி எழும்புவார் என்று மோசே உரைத்த அந்த தீர்க்கதரிசி. "நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது இத்தகைய காரியங்களைச் செய்வார் என்று நாங்கள் போதிக்கப்பட்டு இருக்கிறோம்'' என்றாள். அது தான் மேசியாவின் அடையாளம். சரிதானே-? அதாவது அவளிக்கிருந்த குறையை அறிந்ததே. ''மேசியா வரும் போது இவைகளை எங்களுக்கு அறிவிப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீர் யார்-?' என்றாள். "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். 98. தண்ணீர் குடத்தை அவள் அங்கேயே விட்டாள். தன் இருதயத்தைத் தாங்கிக் கொண்டு பட்டணத்துக்குள் ஓடினாள். தன் மார்பைத் தாங்கிக்கொண்டு, குதித்து, அவள், "ஒரு மனிதனை வந்து பாருங்கள். அவர் நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொல்லி விட்டார். இவர் அந்த மேசியா தான் அல்லவா-? வருவார் என்று வேதாகமம் கூறுகிறதே, அவர் இவர் தான் அல்லவா-? அங்கே ஒரு யூதன் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். சாதாரணமான ஒரு மனிதன், பார்ப்பதற்கு ஒரு தச்சனைப் போல காணப்படுகிறார். ஆனால் எனக்கு ஐந்து புருஷர்கள் இருந்ததை அவர் சொல்லி விட்டார். அது உண்மை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இவர் மேசியாவாகத் தான் இருக்க வேண்டும்'' என்றாள். அது சரிதானே-? 99. இயேசு, ''சிறிது காலத்துக்கு, இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இதைக் காட்டிலும் அதிகமான கிரியைகளைச் செய்வீர்கள். ஏனென்றால் நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன். நான் ஆவியாகத் திரும்புவேன்'' என்றார். பலி செலுத்தப்பட்டு விட்டது. அந்த ராஜரீக வித்து மரித்தது. அந்த ராஜரீக வித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தது. அந்த ராஜரீக வித்து இந்த ஜனங்களுக்குள் வந்து அவர்களை உடன் சுதந்தரவாளிகளாக-தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆக்கும் என்னும் விசுவாசத்தின் மூலம் இப்போது சபையானது நீதிமானாக்கப்பட்டுள்ளது. 100. இந்த ஜெபவரிசையில் இல்லாதவர்களுக்கு, ஜனங்களுக்கு ஜெபச்சீட்டு கொடுக்கச் சொன்னேன்... நான் அவனுடன் தொலைபேசியின் மூலம் பேசினபோது அவன், "அப்பா, நான் போய் அவர்களுக்கு ஜெபச்சீட்டு கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறீரா-?'' என்று கேட்டான். 101. "நமது கூடாரச் சபையில் இராதவர்கள் பத்துக்கு மிஞ்சினால் சீட்டு கொடு" என்றேன் நான். 102. சில வேளைகளில் கூடாரச் சபையிலுள்ளவர்களை நான் அழைத்து ஜெபச் சீட்டைக் கொடுக்கிறேன். நீங்கள் "சரி, அவர் அவர்களை ஏற்கனவே அறிந்திருக்கிறார். அவர்கள் கூடாரச் சபையைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களின் நிலையை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்" என்கிறீர்கள். 103. அப்போது நான் "கூடாரச் சபையைச் சேராதவர்கள் வாருங்கள். ஆம், கூடாரச் சபையைச் சேராதவர்கள், நீங்கள் மாத்திரமே ஜெப வரிசையில் வாருங்கள்'' என்கிறேன். 104. “ஓ, நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை . அவர்களுடைய வியாதி என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் ஒருவேளை அதைக் குறித்து பொய் சொல்லியிருக்கக்கூடும் " என்று கூட சபையினர் கூறலாம். பார்த்தீர்களா-? 105. அப்பொழுது நான், "யாரும் வராதீர்கள், இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கும் கூடாரச் சபையாராய் இல்லாதவர்களை பரிசுத்த ஆவியானவரே தேர்ந்தெடுக்கட்டும்" என்கிறேன், இருந்த போதிலும் நீங்கள்.... 106. ஒருவன் தேவனுடைய குமாரனாக ஆக முன் குறிக்கப்பட்டிருந்தாலன்றி அவனைத் தேவனிடம் கொண்டுவர எவ்வித வழியுமில்லை. அவ்விதம் செய்ய வேறு வழியே இல்லை. இயேசு, "என் பிதா ஒருவனை, இழுத்துக் கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' என்றார். அது உண்மை . ஆக அவர் செய்த எல்லாவற்றிலும் முரண்பாடுகளை ஜனங்கள் கண்டார்கள். இவ்விதம் செய்தால், அது அவ்விதம் செய்திருக்க வேண்டும் என்கின்றனர். அது அவிசுவாசமே. ஆனால் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக் கொள்ளப்படும். 107. நான் இங்கு கூடி வந்துள்ளவர்களுக்கு சொல்ல முயற்சிப்பது என்ன என்றால், இயேசு கிறிஸ்துவே அந்த ராஜரீக வித்து. அது நாம் அல்ல, அவரே. நாம் அதற்கு சுதந்தரவாளிகளானோம். ஆனால் எல்லாம் நம்முடையதே. சீமோன் அங்கே வந்த போது, அவர் அங்கே நின்று, செய்த முதலாம் காரியம் பகுத்தறியும் ஊழியமே அல்லாமல் வேறென்ன-? 108. அவர் இப்பொழுதும் அதைச் செய்வாரானால், இங்கு வந்திருப்பவர்களில் அநேகர் அதை முதன் முறையாகக் காண்பார்கள். அவர்கள் அதை முன்பு கண்டிருக்கவில்லை. 109. அந்த பழங்கால செம்படவனான சீமோன், கையெழுத்து கூட போடத்தெரியாத அளவுக்கு கல்வியற்றவனாக இருந்தான். வேதாகமம் அவனை படிப்பறியாதவனென்றும், பேதைமையுள்ளவனென்றும் கூறுகிறது. அவன் படிப்பறியாதவனாயும், அதே சமயத்தில் பேதைமையுள்ளவனாயும் இருந்தான். பின்னர் அவன் இயேசுவிடம் சென்ற போது, அவர், "உன் பெயர் சீமோன்" என்றார். அவன் சிந்தையில் என்ன எழுந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்-? நீங்கள் அங்கே நின்றுக் கொண்டிருந்திருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்-? "உன்னுடைய தகப்பனின் பெயர் யோனா, இன்று முதல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்''. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-? அந்த மனிதன் மனோதத்துவ முறையில் அவருடைய சிந்தையை அறிந்தார் (mindreading) என்று நினைத்திருப்பீர்களா-? நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள்-? அது மேசியாவின் அடையாளம் என்று நினைத்திருப்பீர்களா-? 110. ஒரு காலத்தில் அது மேசியாவின் அடையாளமாய் இருந்ததென்றால், இரண்டாம் காலத்திலும் அது மேசியாவின் அடையாளமாயிருக்க வேண்டும். மூன்றாம் காலத்திலும், நான்காம் காலத்திலும், ஒவ்வொரு காலத்திலும் அதுவே அடையாளமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தேவன் மாற முடியாது. மேசியா தேவனாயிருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? நிச்சயமாக, அது அவரே. அபிஷேகம் பண்ணப்பட்டவர். நிச்சயமாக, ஆகவே அவர் மாற முடியாது. அவர் ஒரே விதமாக இருக்க வேண்டும். 111. அதன் காரணமாகவே அவர் யூதருக்குக் காட்டின அதே அடையாளத்தையே சமாரியருக்கும் காட்டினார். ஏனென்றால் அந்த மூன்று ஜாதிகளும் சேம், காம், யாப்பேத் ஆகியோரின் சந்ததியே; யூதர், புறஜாதியார், சமாரியர் என்பவர்களே. 112. பரிசுத்த ஆவியைக் கவனித்தீர்களா-? பேதுருவிடம் ராஜ்யத்தின் திறவு கோல் இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? அவன் பெந்தேகோஸ்தே நாளன்று அதை யூதருக்குத் திறந்தான் என்பதை கவனித்தீர்களா-? பிலிப்பு சென்று சமாரியருக்குப் பிரசங்கித்து அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான். ஆனால் அது வரை அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கவில்லை. அவர்கள் பேதுருவை அழைக்க வேண்டியதாய் இருந்தது. அவன் தன் கைகளை அவர்கள் மேல் வைக்க, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அது சரிதானா-? கொர்நேலியுவின் வீட்டில் புறஜாதியார் அதைப் பெற்றார்கள். அன்று முதல், இயேசு எல்லாருக்கும் அதை திறந்தார். பாருங்கள்-? அவர் அதை திறக்க வேண்டியதாயிற்று. காரியங்களைச் செய்ய தேவனிடம் பிரத்தியேக வழிகள் உண்டு. 113. இன்று காலையிலே, வித்து இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்குமானால், (இங்குள்ள ஒவ்வொருவரும் வித்து என்று நம்ப விரும்புகிறேன்) நிச்சயமாக அது இந்த வாக்குத்தத்தத்தைக் காணும். இங்கே நின்று கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் கைகளை உயர்த்தினார்கள். அவர்கள் இதற்கு முன்பு இந்தக் கூட்டங்களுக்கு வந்ததில்லை. அவர்கள் எனக்கு அந்நியர்கள். அவர்களில் ஒருவரையும் கூட நான் அறியேன். அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு தான் வந்தார்கள். பில்லி அவர்களுக்கு ஜெபச்சீட்டைக் கொடுத்தான். அவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். கைகளை உயர்த்தின உங்களில் அநேகரிடம் ஜெபச்சீட்டுகள் கிடையாது, நீங்கள் எனக்கு அந்நியர்கள். அதனால் ஒன்றுமில்லை, நீங்கள் வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள் என்று மாத்திரம் விசுவாசியுங்கள். அவருடைய தழும்புகளால் குணமானோம் என்று மாத்திரம் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து அவர் செய்வதைப் பாருங்கள். 114. என்னை முழுதுமாக அவரிடம் ஒப்புவிப்பதன் மூலம், இந்த வரம் கிரியை செய்கிறது. நான் ஒன்றுமே கூறுவதில்லை. அவர் தான் பேசுகின்றார். இது அவருடைய தீர்க்கதரிசனத்தின் ஆவியானால், தீர்க்கதரிசியானவன், "கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதை எக்காலத்திலும் கொண்டிருக்கிறான். அது எப்போதுமே சரியாக அமைந்து வந்திருக்கிறது. ஸ்தாபனப் பேதகங்கள் எதுவும் இதில் சம்பந்தப்படவில்லை. அது தேவன் கூறினதானால், அது வேதாகமத்துடன் இணைந்திருக்க வேண்டும். தேவன் ஒரு காரியத்தைச் சொல்லி, பின்னர் அதை மாற்றி வேறு விதமாய் கூறமுடியாது. எல்லா காலத்திலும் அது ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். 115. வெளியே நிற்கிறவர்களே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், விசுவாசியுங்கள். இனி அங்குமிங்கும் நடக்காதீர்கள். ஒவ்வொருவரும் அசையாமல் உட்கார்ந்துக் கொள்ளுங்கள். மெதுவாகவும், சத்தமில்லாமலும் உட்காருங்கள். இன்று காலை, இங்கே, முதலாவதாக நின்று கொண்டிருப்பவர் ஒரு மனிதன். இப்போது நாம் இந்த வேத வாக்கியத்தைப் பார்க்கப் போகிறோம். 116. இப்போது நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் காண்கிறீர்களா-? எத்தனை பேர் அதைக் கண்டு கொள்கிறீர்கள்-? இங்கே நின்று கொண்டிருக்கும் மனிதர்களையும் ஸ்திரீகளையும் நான் என் வாழ்க்கையில் என் கண்களால் கண்டதில்லை. அவர்கள் இந்த கூட்டங்களுக்கு ஒரு போதும் வந்ததில்லை. அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். என்ன நடக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனால் தேவன் அதை வாக்களித்துள்ளார். ஆபிரகாம் கத்தியை எடுத்து ஈசாக்கை வெட்டப் போன போது என்ன நடக்கும் என்று அவன் அறியவில்லை. ஆனால் தேவன் அவனுக்கு வாக்களித்திருந்தார். அதனுடன் அது முடிவு பெற்றது. மரித்தோரிலிருந்து ஒருவனைப் பெறுவதைப் போல அவன் தன் மகனைப் பெற்றுக் கொண்டான். ஆனால், அவர் அவனை மரித்தோரிலிருந்தும் எழுப்ப வல்லவராய் இருக்கிறாரென்று அவன் நம்பினான். அது சரிதானே-? ஆக, அதை அது முடிவு செய்கிறது. 117. இப்போது என் பக்கத்தில் ஒரு மனிதன் நிற்கிறான். நான் அவனை ஒருபோதும் கண்டதில்லை, அவனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒருவரையொருவர் அறியோம். எங்கள் இருவரையும் தேவன் அறிவார். இப்போது நான் திவ்விய வரத்தினாலே, வரத்தின் மூலம், நான் .... அந்த வரங்கள் என்னிலே பிறந்திருக்கின்றன --- உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் அதை முன் குறித்தார். அது எத்தனை பேருக்குத் தெரியும்-? நானே அந்த வரத்தை எடுத்துக் கொள்ளவில்லை --- தேவன் அதை தெரிந்தெடுத்து அளித்தார். விளங்குகிறதா-? பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் மற்றவர்களும் அவரவர் காரியங்களைச் செய்ய முன் குறிக்கப்பட்டது போல. 118. இந்த மனிதன் வியாதியாயிருந்தால் நான் அவனை குணப்படுத்த முடியாது. ஏதாவது இவனுக்கு அவசியப்படுமானால், அது அவனுக்கு எத்தகைய உதவி அவசியம் என்பதை அனுசரித்து நான் அவனுக்கு உதவி செய்ய கூடுமா கூடாதா என்பது இருக்கிறது. அவனுக்கு உதவி செய்யக்கூடுமானால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன். ஒரு வேளை அவனுக்கு கோபத்தன்மை இருக்கலாம். ஒரு வேளை அவன் கிறிஸ்தவனல்லாதவனாய் இருக்கலாம் அல்லது கிறிஸ்தவனாயும் இருக்கலாம். வியாதியே இல்லாமல் வியாதியுள்ளவன் போல, போலி நடிப்பும் நடிக்கலாம், எனக்குத் தெரியாது. அவன் பதுங்கி வந்து நுழைந்து வியாதி உள்ளவனைப் போல வேவு பார்க்க வந்திருந்தால் என்ன நடக்கப் போகிறது பாருங்கள். என்ன நடக்கிறதென்று பாருங்கள். விளங்குகிறதா-? நான் அறியேன். 119. ஆனால், இங்கே நீங்கள் நிற்கிறீர்கள். பூரண விசுவாசத்தில் நீங்கள் நிற்கலாம். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார், தேவன் தாமே வாக்குத் தத்தத்தைக் காத்து கொள்பவர் என்ற விசுவாசத்தில் நீங்கள் இருக்கலாம். தெரிகிறதா-? இங்குள்ள ஜனத்தின் மத்தியில் தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொண்டால், வெளியே நிற்கிறவர்களாகிய உங்களில் எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் இதை விசுவாசிக்கப்போகிறீர்கள்-? அப்படியானால் கவனியுங்கள். 120. வேத வாக்கியத்தைப் பார்ப்போம். சீமோன் பேதுரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்த போது, அவன் யார் என்பதை அவர், அவனுக்குச் சொன்னார் --- அவன் வாழ்க்கையைக் குறித்த சில காரியங்களையும் அவர் சொன்னார். அதே இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா-? எப்போதும் போல, சபையிலே இன்று மேசியாவின் ஆவி ஜீவிக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா-? நல்லது. 121. ஜெபச்சீட்டு இல்லாதவர்கள் இவ்வண்ணம் "கர்த்தாவே" என்று வேண்டிக் கொள்ளுங்கள். சபைக்கு ஜெபச்சீட்டு கொடுக்காதது உண்மை தான். அவர்களை எல்லாம் இங்கே நிற்க வைத்து இருக்கிறேன். சபையிலுள்ளவர்கள், "கர்த்தாவே, என்னைத் தொடும்'' என்று வேண்டிக்கொள்ளுங்கள். அப்போது என்ன நடக்கிறதென்று பாருங்கள். 122. ஐயா, இப்போது என்னால் எப்படியேனும் உதவி செய்யக்கூடுமானால், நான் செய்வேன், பாருங்கள். இங்கே நாம் அந்நியர்கள். உங்களை நான் முதல் தடவை சந்திக்கிறேன். நான் ஒரு ஊழியனாயிருப்பதனாலே, சத்தியத்தைச் சொல்லவும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கவும் பொறுப்பாளியாய் இருக்கிறேன். நீங்கள் எதையும் எனக்கு சொல்ல வேண்டாம். நான் கூறுவது உண்மையா, இல்லையா என்று மாத்திரம் நீங்கள் எனக்கு சொல்ல விரும்புகிறேன். பின்னர் அவர் கிரியை செய்யட்டும். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மூலம் அவர் கிரியை செய்தது போன்று, இந்த மேடையிலிருந்து இந்த சரீரத்தின் மூலமும் அவர் கிரியை செய்வாரானால், இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து கொண்டு அவர் கிரியை செய்தார், அது தான் தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தது. இயேசு "எனக்குள் இருக்கும் என் பிதா எனக்குக் காண்பிக்கும் வரை நான் எதையும் செய்வதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே எனக்குச் சொல்லுகின்றார்'' என்றார். எனவே எந்த ஸ்திரீக்குச் சொன்னது இயேசுவல்ல, அவருக்குள் இருக்கும் பிதாவே அந்த ஸ்திரீக்குச் சொன்னார். பேதுரு யார் என்று இயேசு அறிந்திருக்கவில்லை, அவரில் வாசம் பண்ணின பிதாவே, பேதுரு யார் என்பதை அறிந்திருந்தார். அது தான் அது. பார்த்தீர்களா-? அது தான் அது. 123. நீ ஒரு கிறிஸ்தவன் என்று நான் உன்னிடம் இப்பொழுது கூறமுடியும். ஆம் ஐயா, வரவேற்கும் ஆவி உன்னில் அனல் கொண்டு அசைவாடுகிறது. அவர் ஒரு கிறிஸ்தவன், ஒரு விசுவாசி. நீ நரம்பு வியாதியில் அவதியுறுகிறாய், அது உனக்கு வயிற்றுக்கோளாறை உண்டாக்கியுள்ளது. (நோயாளி "அதுசரி'' என்கிறார்-- ஆசிரியர் அது சரி தானே-? ("அது, சரிதான்") பார்த்தீர்களா-? பார்த்தீர்களா-? அது முற்றிலும் சரி. அதை நான் எப்படி அறிய முடிந்தது-? அதை நான் எப்படி அறிய முடியும்-? நாங்கள் ஒருவரையொருவர் இதற்கு முன் கண்டதில்லை. அது உண்மை அல்லவா-? ஒரு வேளை அவர் உன்னைக்குறித்து வேறு விஷயங்களையும் கூறலாம். உன் பக்கத்தில் ஒரு ஸ்திரீயைக் காண்கிறேன், அவள் உன்னுடன் இருக்கிறாள். அவள் உன் மனைவி. அவளுக்கும் உதவி தேவை. ("அது சரிதான் ") ஆம் ஐயா-! உன் மனைவிக்கு என்ன வியாதி என்று எனக்குச் சொல்ல தேவன் இங்கே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா-? ("அவரால் கூடும் என்று அறிந்திருக்கிறேன்'') நல்லது. ஐயா, அவளுக்கு ஒரு சிக்கலான இருதய நோய் உள்ளது, ("ஆம் ஐயா'). அது சரி தான் அல்லவா-? ("அது சரிதான்") நரம்புக் கோளாறும் உண்டு , ("ஆம் ஐயா"). நீ இந்தப் பட்டணத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீ வீட்டுக்கு , சின்சின்னாட்டி (Cincinnati) பட்டிணத்துக்கு போகும்போது இந்த வழியாய் போகின்றாய். அது சரி. ஓஹையோவிலுள்ள சின்சின்னாட்டியைச் சேர்ந்தவன். ("ஆம் ஐயா') உன் பெயர் மில்லிக்கன் (Milliken). திரும்பி வீட்டுக்குப் போய் சுகப்படு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். நீயும் உன் மனைவியும் சுகப்படுவீர்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வாரும் ஐயா, நீர் விசுவாசிக்கிறீரா-? விசுவாசமுள்ளவனாயிரு. சந்தேகப்படாதே. 124. ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். உண்மையில் பயபக்தியாகவும் மௌனமாயும் இருங்கள். பரிசுத்த ஆவியானவர் சங்கோசமுள்ளவர் (timid - மென்மை) .இது எத்தனை பேருக்குத் தெரியும்-? ஒரு சிறு அமைதியின்மையும் கூட பரிசுத்த ஆவியானவரைத் தொந்தரவு செய்கிறது. 125. டாக்டர்களுடைய அபிப்பிராயப்படி நீ உன் இருதய நோயால் உடனே மரிக்க வேண்டும். (நோயாளி "ஆமாம்'' என்கிறார் - ஆசிரியர்) நல்லது. திரு. மோஸ்லி, நீர் சிக்காகோ பட்டணத்திலிருந்து வந்திருக்கிறீர். உம் முதல் பெயர் தியோடோர். (“ஆமாம்”) நீர் தேவனை விசுவாசிக்கிறீரா-? ("ஆமாம்”). அப்படியானால் வீட்டுக்குச் சென்று உயிர் வாழுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெறுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக-! 126. நீ தேவனை விசுவாசிக்கிறாயா-? ("நிச்சயமாய் நம்புகிறேன். ஆம், ஐயா"). உன் காலில் நோய் இருக்கிறது. நீயும் இந்த நகரத்துக்கு வெளியேயிருந்து வந்து உள்ளாய். ("ஆம், ஐயா"). நீ கென்டக்கியிலுள்ள ஓவென்ஸ் போரோவைச் சேர்ந்தவள். உன் பெயர் திருமதி லேம்ப் (Mrs. Lamb) ("ஆம், ஐயா") . வீட்டுக்குச் சென்று சுகம் பெருவாயாக. 127. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீயும் ஓவென்ஸ் போரோவைச் சேர்ந்தவள். அவள் மார்பின் கீழ் ஒரு கட்டி எழும்பியிருக்கிறது. நாளைக்கு ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கிறாய். போ, விசுவாசி, உயிர் வாழு. 128. ஐயா, நீர் விசுவாசிக்கிறீரா-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். உம் பெயர் திரு கில்ராய் சரி தானே-? நீர் இந்தியானாவைச் சேர்ந்த ஆண்டர்ஸன் நகரத்திலிருந்து வந்திருக்கிறீர். அங்கு சர்ச்-ஆப்காட் என்னும் இயக்கம் இருக்கிறது நல்லது துன்பத்திலிருக்கும் உம் மகளுக்காக நீர் இங்கே வந்திருக்கிறீர். அவள் ஒரு பக்கம் பாரிச வாயுவால் துன்பப்படுகிறாள் (partially paralyzed). நீர் விசுவாசிக்கிறீரா-? அப்படியானால், வீட்டுக்குச் சென்று நீர் விசுவாசிக்கிறபடியே அவளைச் சுகமாக காண்பீர். நல்லது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமுள்ளவனாயிரு, அதை விசுவாசி. 129. ஐயா, உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா-? ("ஆம், ஐயா") நீர் இந்தியானாபோலிஸ் நகரத்தைச் சேர்ந்தவர். ("அது சரிதான்") நீர் சுவிசேஷத்தின் ஒரு ஊழியன். அது உன் மனைவி. ம்ம்-? அவளும் நோயாளி. அவளுக்கு உணவுக் குழாயில் வலி. டாக்டர் அவளுக்கு இருதய நோய், நரம்பு வியாதியிருக்கிறது என்றார். அவள் செவிடாய் இருக்கிறதையும் காண்கிறேன். இங்கே வா, நன்றி. செவிட்டு ஆவியே உனக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே உத்தரவிடுகிறேன், அந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா-! நீ இப்போது நான் சொல்வதைக் கேட்கிறாய். நீங்கள் இருவரும் வீட்டுக்குச் சென்று சுகம் பெறுங்கள். உங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போங்கள். நீங்கள் சுகமாயிருக்கிறீர்கள் என்று எனக்கு எழுதித் தெரிவியுங்கள். 130. நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், நம்புங்கள். 131. பழைய மூட்டு வலி மோசமானது. தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? அப்படியானால் அந்த வழியாய் வீட்டுக்குச் சென்று, அவர் நாமத்தை துதித்து, "அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல். விரைவில் நான் அதைக் கண்டுபி டித்த காரணம் என்னவென்றால், இந்த ஸ்திரீயும் மூட்டுவலியில் இருந்தாள். தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? நல்லது, ஐயா. அப்படியானால் அந்த பக்கம் நடந்து, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குப் போ. 132. நல்லது சகோதரியே, திரும்பி வீட்டுக்குப் போ. உன்னுடைய இருதய நோயும் மூட்டு வலியும் இங்கேயே தங்கி விட்டது என்று நினைத்து, திரும்பி வீட்டுக்குச் சென்று, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று சொல்லி சுகப்படுவாயாக. உன்னிலிருக்கும் எல்லாவற்றாலும் விசுவாசி. 133. நீ விசுவாசிக்கிறாயா-? வெளியே இருக்கும் ஜனங்களில் சிலர் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? 134. அங்கே உட்கார்ந்திருக்கும் கருப்புத்தலை கொண்ட (blackheaded) சிறு ஸ்திரீ, திமிர்வாத வியாதியுள்ளவள (epilepsy - வலிப்பு.) தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? நீ அதை ஏற்றுக் கொள்கிறாயா-? நல்லது. நீ விசுவாசித்தால், அவர் அதைச் செய்வார். 135. இங்கே ஒரு பிரசங்கி உட்கார்ந்துக்கொண்டிருக்கிறார். தேவனுடன் நெருங்கி நடக்க ஆசிக்கிறார். ஐயா, அப்படித் தானே-? தேவன் அதை உமக்குச் செய்வார் என்று விசுவாசிக்கிறீரா-? உம் கையை உயர்த்தி , "நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று சொல்லுங்கள். 136. கையை கீழே போட்ட ஸ்திரீ அவளுக்கு ஆத்மீகத் துன்பம். அதைக்குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறாள் . நல்லது. 137. எனக்கு குழந்தை பிறக்குமா என்ற சிந்தனையில் இங்கே ஒரு சிறு ஸ்திரீ இருக்கிறாள். சரிதானே-? நீ என் கூட்டங்கள் ஒன்றில் வந்திருந்தாய். ஒரு குழந்தை பெறுவாய் என்று தேவன் மூலம் நான் வாக்களித்தேன். இல்லையா-? நல்லது. வீட்டுக்குச் சென்று குழந்தைப் பெறுவாயாக, அதைக் குறித்து இனி கவலை கொள்ளாதே. 138. நீங்கள் எல்லோரும் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா-? ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா-? ஆபிரகாமின் வித்து வாசலைச் சுதந்தரிக்கும் - பகைவனின் வாசலை. இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் ஆபிரகாமின் வித்தானீர்களா-? அது உண்மையானால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். பக்கத்திலிருப்பவர் மேல் உங்கள் கைகளை வையுங்கள். பக்கத்திலிருப்பவர் மேல் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். வாசலை இப்போது சுதந்தரியுங்கள், அது உங்களுடையது-! அது உங்களுக்குச் சொந்தம். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும். தேவன் அவர்களை எழுப்புவார். நல்லது. உங்கள் சொந்த விதத்தில் ஜெபியுங்கள். உங்கள் சபையில் ஜெபிக்கிறதைப் போல் ஜெபியுங்கள். உங்களுடன் இருக்கும் ஜனங்களுக்காக ஜெபியுங்கள். ஒருவர் மேல் ஒருவர் கையை வைத்து ஜெபியுங்கள். 139. கர்த்தராகிய இயேசுவே, ராஜரீக வித்தே, ஆபிரகாமின் வித்தாகிய உன்னதமானவருடைய நாமத்திலே நாங்கள் வருகிறோம். அன்று நீர் ஆபிரகாமுக்கு மலையின் மேல் வாக்களித்த போது, அதிசயமாக ஒரு ஆட்டுக் குட்டியை அவனிடம் வனாந்திரத்துக்கு அனுப்பி கொடுத்தது போல, நேற்று அணில்களை அனுப்பினீர். அதைப் போலவே, ஓ, கர்த்தாகிய தேவனே, நீர் வல்லமையை அனுப்பி, விசுவாசத்தைக் கொடுத்து, ஒவ்வொரு வித்தும்... ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிகிறேன். ஏனென்றால், கர்த்தாவே, நீர், "ஆபிரகாமின் வித்து-!'' என்றீர். இங்கே வித்தாக இல்லாமலிருந்தும் வித்தாக நடிக்கிறவர்கள் உண்டானால், அவர்களை மன்னியும் அல்லது பரிசுத்த ஆவியை அனுப்பி அவர்களுடைய ஆத்துமா உயிருள்ள விசுவாசத்தால் கொழுந்து விட்டு எரியச் செய்தருளும். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து ஒவ்வொருவரையும் சுகப்படுத்தட்டும். அவர்கள் தங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ராஜரீக வித்து, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது சொஸ்தமாவார்கள்'' என்றார். வாக்குத்தத்தம் பண்ணினவர் இப்போது இங்கே இருக்கிறார். அவர் தாம் இங்கே இருக்கிறதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வித்து ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துக் கொண்டிருக்கிறது. "விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்”. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு கரத்தின் மூலம் ஜனங்களின் இருதயத்துக்கும் சரீரத்துக்கும் நடுவில் அலை அலையாய் நுழைந்து திவ்விய சமுகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவாராக. கர்த்தாவே, அப்படி செய்தருளும். பிசாசையும், அவிசுவாசத்தையும், ஒவ்வொரு அசுத்தாவியையும், ஒவ்வொரு மாய்மாலக்காரனையும், கர்த்தருடைய வார்த்தைக்கு எதிர்மாறாய் இருக்கும் ஒவ்வொரு காரியத்தையும் நான் கடிந்து கொள்கிறேன். விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் இப்போதே ஒவ்வொரு இருதயத்திலும் தமது இடத்தைப் பிடித்து கொள்வாராக. ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு நோயும், ஒவ்வொரு துன்பமும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜனங்களை விட்டு விலகுவதாக, ஆமென். 140. நீங்கள் ஆபிரகாமின் வித்தாயும், ராஜரீக வம்சமாயும், வாக்குத்தத்தமுமாயும் இருக்கிறீர்கள். தேவனுடைய கிருபையாலும் உதவியாலும் உங்களில் எத்தனை பேர் உங்கள் கரங்களை "நான் கேட்டதைப் பெற்றுக் கொண்டேன்'' என்று கூற முடியும்-? உங்களுக்கு நன்றி, அது நல்லது. அதற்காகவே வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. உங்களை இரட்சிக்க இயேசு கிறிஸ்துவின் மூலம், நீங்களெல்லாரும் எல்லாவற்றிலும் சுதந்திரவாளிகளாயிருக்க வேண்டுமெனும் நோக்கத்துடனே அந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. அவர் உங்களைப் பாவத்திலிருந்து இரட்சித்தார், அவர் உங்களை வியாதியிலிருந்து இரட்சித்தார், அவர் உங்களை மரணத்திலிருந்து இரட்சித்தார், அவர் உங்களை நரகத்திலிருந்து இரட்சித்தார், அவர் உங்களைப் பாதாளத்திலிருந்து இரட்சித்தார். 141. நீங்கள், "சகோ.பிரான்ஹாமே, நாமெல்லாரும் சவக்குழிக்குச் செல்கிறோமே'' எனலாம். ஆனால் சவக்குழி நம்மைப் பிடித்து வைக்க முடியாது. அவரும் அங்கே சென்றிருந்தார். அது அவரை பிடித்து வைக்க முடியவில்லை . நிச்சயமாக அது அவரைப் பிடித்து வைக்க முடியாது. 142. "சரி, சகோ.பிரான்ஹாமே, பலமாய்ச் சோதிக்கப்படுகிறேனே'', எனலாம். அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் உங்களைச் சோதனையிலிருந்து இரட்சித்திருக்கிறார். 143. "எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.'' அவர் இரட்சித்திருப்பதைப் பார், அவைகளெல்லாம் உங்களுடையது. அவர் எல்லாவற்றையும் இலவசமாய் அளிக்கிறார். அதற்கு விலையுமில்லை ஒன்றுமில்லை. இப்போது அது உங்களுடையது. அதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா-? அவரிலே நீங்கள் சந்தோஷப்பட வில்லையா-? தேவனுக்கு நன்றி. 144. இன்றிரவு ஆராதனை இருக்கும். இன்றிரவு ஏழரை மணிக்கு, அதைப் பற்றி போதகரே கூறட்டும். வாருங்கள்... வாருங்கள். அடுத்த ஞாயிறு காலை கர்த்தருக்குச் சித்தமானால், நான் திரும்பி வந்து இந்த கூடார சபையில் பிணியாளிகளுக்காக ஜெபிப்பேன்..... *******